பாக். இன்று பிரம்மாண்ட பேரணி !! இம்ரான் கான்: தலைவிதி நாளை!!!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஆளும் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள நிலையில், அவர் சார்ந்த தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த 50 அமைச்சர்களை காணவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

பாகிஸ்தானில் பொருளாதார தேக்க நிலைக்கு இம்ரான் கானின் மோசமான அணுகுமுறையே காரணம் என்ற குற்றச்சாட்டை முன் வைத்த எதிர்கட்சிகள், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர் இதனை தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

288.03.2022 நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடக்கிறது. பதவி விலகும் திட்டத்தில் இம்ரான் கான் இந்த நிலையில், நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாத காரணத்தால் அதற்கு முன்னதாக தாமாகவே முன்வந்து பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து இம்ரான் கான் ராஜினாமா செய்வார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனிடையே முதஹிதா கவுமி கட்சியின் தலைமை இன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று பிரம்மாண்ட பேரணி இன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அவர் சார்ந்த தெஹ்ரிக் கட்சி சார்பில் இன்று நீதியுடன் நிற்போம் என்ற பெயரில் பிரம்மாண்ட பேரணி நடைபெற உள்ளது.

கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் புடைசூழ நடைபெறும் அந்த பேரணியில் தனது ராஜினாமாவை அவர் அறிவிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 50 அமைச்சர்களை காணவில்லை இத்தகைய அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மற்றும் மாகாண அமைச்சர்கள் என 50 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் யாரின் நடமாட்டத்தையும் சமீப காலமாக வெளியில் காண முடியாததால் சந்தேகம் அதிகரித்துள்ளது.

25 பேர் மத்திய அமைச்சர்கள் காணாமல்போன அமைச்சர்களில் 25 பேர் மத்திய அமைச்சர்களும் மாகாண ஆலோசகர்களும் சிறப்பு உதவியாளர்களும் ஆவார்கள். 4 பேர் மாநில அமைச்சர்களும், மற்ற 4 பேர் உதவியாளர்களும், 19 பேர் சிறப்பு உதவியாளர்களும் ஆவார்கள். இம்ரான் கானை எதிர்த்த அமைச்சர்கள் குறிப்பாக பாகிஸ்கான் பிரதமர் இம்ரான் கானை கடுமையாக எதிர்த்து வந்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி, ஆற்றல்துறை அமைச்சர் ஹம்மாத் அசார், பாதுகாப்புத்துறை அமைச்சர் பர்வேஸ் கட்டக், உள்கட்டமைப்புத்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் ஆகியோர் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவலே இல்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Previous Story

நெருக்கடிகளும் பரிகாரங்களும் ஏமாற்றங்களும்

Next Story

அரபுக் கல்லூரிகளுக்கு ஆப்பு