சீறிப் பாய்ந்த ஹக்கீம்

-நஜீப்-

மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர்  ஹக்கீம் நாடாளுமன்றத்தில் சீறிப் பாய்ந்து அரசாங்கத்தை விமர்சித்திருக்கின்றார்.  அவருக்கு எதிராக குரல் கொடுத்த ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தக்க பதிலும் கொடுத்திருக்கின்றார்.

இது நல்ல முன்னேற்றம் என்று நாம் எடுத்துக் கொண்டாலும் இதன் பின்னர் ராஜாக்கள் அரசு நெடுநாள் உயிர் வாழாது என்ற எதிர்பார்ப்பில் ஹக்கீமின் பாய்ச்சலாக இது இருக்க வேண்டும் என நாம் நினைக்கின்றோம்.

அதே நேரம் சர்வகட்சி கூட்டத்துக்கு மு.கா. போகாது என்று சொன்னாலும் மீன்பாடும் மாவட்டத்தில் அந்தக் கட்சி பிரமுகர் அங்கு போய் இருக்கின்றார். இதுவும் ஹக்கீம் சொல்லித்தான் நடந்ததோ என்றும் எங்களுக்கு ஒரு சந்தேகம்.!

இதற்கு முன்னர் போராளிகளை ஆளும் தரப்புக்கு வழியனுப்பி 20க்கு கைதூக்க ஏற்பாடு பண்ணியவரே தலைவர்தான்.

அவர் வீட்டில் ஏழு தலையார் முன்னில்லையில்தான்  முடிவுகள் எடுக்கப்பட்டது என்று வாக்குமூலங்கள் இருக்கின்றன. அதனால்தான் ஒழுக்காற்று நடவடிக்கை என்று எதுவுமே கட்சியில் இது வரை நடக்காமல் போச்சி.!

நன்றி:ஞாயிறு தினக்குரல் 27.03.2022

Previous Story

உடனடி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு! - கூட்டமைப்புடனான பேச்சு வார்த்தையில் ஜனாதிபதி இணக்கம்!

Next Story

"கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வட கொரியா வெற்றிப் பெற்றது"