இஸ்லாமோஃபோபியா குறித்து இம்ரான் கான் பரபர பேச்சு.!

இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர், அதிகரித்த இஸ்லாமோஃபோபியா குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அவரது கட்சியிலேயே எதிர்ப்பு எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது.

இம்ரான் கானை பிரதமர் பதவியில் இருந்து நீக்கவும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், இஸ்லாமோஃபோபியா குறித்தும் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர் அதை இஸ்லாமிய நாடுகள் எப்படிக் கையாண்டன என்று குறித்து இம்ரான் கான் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், “அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு தான் உலகில் இஸ்லாமோஃபோபியா வளர்ந்தது.

இது தொடர்பாக உலக நாடுகள் மத்தியில் பரவும் கருத்து உருவாக்கம் தொடர்பாக முஸ்லீம் நாடுகள் எதுவும் செய்யாததால், அது கட்டுக்கடங்காமல் போய்விட்டது. இதுபோன்ற கருத்து உருவாக்கம் பரவுவதைத் தடுக்க இஸ்லாமிய நாடுகள் எதுவும் செய்யவில்லை. இது தொடர்பாக மக்களிடையே இருக்கும் நம்பிக்கைக்கும் களத்தில் இருந்து பயங்கரவாதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

இரட்டை கோபுர தாக்குதல் விளையாட்டு வீரராக இருந்த போது, எனது வாழ்நாளில் குறிப்பிட்ட பகுதியை நான் இங்கிலாந்தில் கழித்துள்ளேன். சர்வதேச விளையாட்டு வீரராக உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன்.

பெரும்பாலான மக்களை விட மேற்கத்திய நாகரீகத்தை நான் நன்றாகப் புரிந்துகொள்கிறேன். இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு தான் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணர்வு அதிகரித்து வந்ததை உணர முடிந்தது. இந்த உணர்வு அந்த தாக்குதலுக்குப் பின்னர் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

முஸ்லீம் நாடுகள் இதைச் சொல்ல நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால், இஸ்லாமோஃபோபியா தொடர்ந்து வளர்ந்து வந்தது, காரணம் முஸ்லீம் நாடுகள் தான். அவர்கள் இந்த கருத்து உருவாக்கத்தைச் சரிபார்க்கத் தவறிவிட்டனர். எந்த மதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் எப்படி தொடர்பு இருக்கும்? இஸ்லாம் எப்படி பயங்கரவாதத்துடன் தொடர்புப்படுத்தப்பட்டது?

இந்தச் சம்பவம் நடந்த பின்னர், மேற்கத்திய நாட்டில் ஒரு மனிதனை அவர்கள் எப்படி மிதவாத முஸ்லீம் மற்றும் தீவிர முஸ்லீம் என்று வேறுபடுத்துகிறார்கள்.

இதற்காக மசூதிக்குள் நுழைந்து ஒருவர் அனைவரையும் சுட்டுக் கொல்வது சரியா” என்று 2019இல் நடந்த கிறிஸ்ட்சர்ச் மசூதி துப்பாக்கிச் சூட்டைக் குறிப்பிட்டுப் பேசினார். முடிவு எடுக்கவில்லை இம்ரான் கான் மேலும் கூறுகையில்”துரதிர்ஷ்டவசமாக, என்ன செய்திருக்க வேண்டுமோ, அதைச் செய்யவில்லை. முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் இது குறித்து ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும். ஆனால் நிறைய நாடுகளின் தலைவர்கள் தங்களை மிதவாதிகள் என்று காட்டிக் கொண்டனர்.

ஆனால் அது தொடர்பாக அவர்கள் எந்தவொரு குறிப்பிட தகுந்த முடிவையும் எடுக்கவில்லை” என்று அவர் மேலும் கூறினார். சர்வதேச அளவில் இஸ்லாமோஃபோபியா அதிகரிக்க முஸ்லீம் நாடுகளே காரணம் என இம்ரான் கான் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,

Previous Story

உக்ரைன் போர்: இந்தியா நிலைப்பாடு பிடன் விமர்சனம்!

Next Story

நமது முழு வான் பரப்பும் இந்தியாவுக்கு விற்பனை!