போர் பற்றி செய்தி வாசிக்கும் போதே.. உள்ளே புகுந்த ரஷ்ய பெண்..

ரஷ்ய செய்தி சேனல் ஒன்றில் இன்று காலை உக்ரைன் போர் குறித்த செய்தி வாசிக்கப்பட்டு கொண்டு இருந்த போது பெண் ஒருவர் திடீரென திரையில் தோன்றி போருக்கு எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச அளவில் இந்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது. ரஷ்யாவின் மிகப்பெரிய செய்தி நிறுவனங்களில் ஒன்று சேனல் 1. இந்த நிறுவனம் அந்நாட்டு அரசு மூலம் நேரடியாக கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிறுவனம் ஆகும்.

ரஷ்ய அரசு மூலம் கட்டுப்படுத்தப்பட்டு வருவதால் ரஷ்ய ஆதரவு செய்திகள் இதில் அதிகம் இடம்பெறும். அதேபோல் உக்ரைன் – ரஷ்யா போர் குறித்தும் இதில் தொடர்ந்து அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாபெரும் குற்றம்.. போரை நிறுத்துங்கள்!

உக்ரைன் துயரம் கண்டு சொந்த நாட்டின் மீது கோவப்பட்ட ரஷ்ய பைலட் மேற்கு உலகம் இந்த போரில் பெரும்பாலான செய்திகள் ரஷ்யாவிற்கு எதிராகவே வந்து கொண்டு இருக்கின்றன. காரணம் பெரும்பாலான மீடியா நிறுவனங்கள் மேற்கு உலகை சேர்ந்தவை. மேற்கு உலக நாடுகளின் கட்டுப்பாட்டில் இருப்பவை.

இந்த நிறுவனங்கள் கொடுக்கும் பார்வை மட்டுமே வெளியே தெரியும் நிலையில் ரஷ்யாவின் பக்க நியாயம் பெரிதாக வெளியே காட்டப்படுவது இல்லை. சேனல் 1 போன்ற சில சேனல்கள் மட்டுமே ரஷ்ய தரப்பு நியாயத்தை வெளியே காட்டி வருகிறது. ரஷ்யா இந்த நிலையில்தான் இன்று அதிகாலை சேனல் 1 நிகழ்ச்சியில் உக்ரைன் போர் பற்றி செய்தி வாசிக்கப்பட்டு வந்தது.

இந்த போர் ஏன் அவசியம் என்பதை சுட்டிக்காட்டி அந்த செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் ஒருவர் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அந்த சேனலில் வேலை பார்க்கும் மரினா ஓஸ்யானியாக்கோவா என்ற பெண் திடீரென செய்தியாளருக்கு பின்னால் வந்து நின்றார். ரஷ்யா ரஷ்ய வாசகம் அடங்கிய பதாகையோடு பின்னால் வந்து நின்ற மரினா,

இந்த சேனலில் பொய் சொல்கிறார்கள். அரசுக்கு ஆதரவான செய்திகளை வேண்டும் என்றே பரப்புகிறார்கள். நிறுத்துங்கள். போரை நிறுத்துங்கள் என்று கத்தினார். அதோடு அவரின் கையில் இருந்த பதாகையிலும் இதே வாசகங்கள் இடம்பெற்று இருந்தன. போரை நிறுத்துங்கள்.. நிறுத்துங்கள் என்று அதில் எழுதப்பட்டு இருந்தது.

செய்தி வாசிக்கப்பட்டு கொண்டு இருக்கும் போதே பாதியில் குறுக்கிட்டு இவர் அப்படி செய்தார். நிறுத்தப்பட்டது மரினாவின் இந்த செயல் உலகம் முழுக்க கவனம் ஈர்த்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக ரஷ்ய அரசு கட்டுப்பாட்டில் உள்ள சேனல் ஒன்றிலேயே இவ்வளவு பெரிய விஷயம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து மரியா தற்போது ரஷ்ய போலீசார் மூலம் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவருக்கு எதிராக தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. இவருக்கு எதிராக 10-15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் இப்படி பதாகை காட்டும் முன் அதை பற்றிய வீடியோ ஒன்றையும் மரினா வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய தந்தை உக்ரைன் நாட்டி சேர்ந்தவர். இந்த போர் நிறுத்தப்பட வேண்டும். ரஷ்யா செய்வது போர் குற்றம்.

ரஷ்யாவின் ஆதரவு செய்தி சேனல் ஒன்றில் வேலை பார்ப்பதை நான் வெறுக்கிறேன். ரஷ்ய மக்கள் போரை ஆதரிக்கவில்லை. இந்த அரசு மட்டுமே போரை கண் மூடித்தனமாக ஆதரிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Previous Story

உக்ரைன் போர் மே மாதத்தில் முடிவடையும்!

Next Story

உக்ரைன் தலைநகரில் குடியிருப்பு கட்டடங்களை தகர்த்ததால் பெரும் பரபரப்பு