யுக்ரேனில் அமெரிக்க பத்திரிகையாளர் உயிரிழப்பு

அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் ப்ரென்ட் ரெனாட், யுக்ரேன் தலைநகர் கீயவுக்கு வெளியே இர்பின் என்ற நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அவர் ரஷ்ய படையினரால் தாக்கப்பட்டார் என்று கீயவின் தலைமை காவல்துறை அதிகாரி ஆண்ட்ரிவ் நெபிடோவ் தெரிவித்துள்ளார். மேலும் இரு பத்திரிகையாளர்கள் காயமடைந்துள்ளனர்; அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் யுக்ரேனில் செய்தி சேகரிக்கும் முதல் வெளிநாட்டு பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.ப்ரென்ட் ரெனாட்டிற்கு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையால் வழங்கப்பட்ட அடையாள அட்டையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

ஆனால் கடந்த 2015ஆம் ஆண்டுதான் ப்ரென்ட் ரெனாட் தங்களுக்காக கடைசியாக பணிபுரிந்தார் என்றும், யுக்ரேனில் தங்களுக்காக அவர் பணிபுரியவில்லை என்றும் நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும் அவர் பணி செய்து வந்த காலத்தில் அந்த அடையாள அட்டை வழங்கியதாகவும் நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. எனவே யுக்ரேனில் ப்ரென்ட் எந்த பத்திரிகைக்கு பணி செய்து வந்தார் என்பது இதுவரை தெரியவில்லை.

Previous Story

ஒரு வருடம் தாருங்கள்!

Next Story

கர்நாடகா ஹிஜாப்: தீர்ப்பு