நான் துப்புரவு தொழிலாளி…முதல்வரை தோற்கடித்த ஆம்ஆத்மி வேட்பாளரின்  தாய்!

நான் துப்புரவு தொழிலாளி… பணியை விடவே மாட்டேன்… முதல்வரை தோற்கடித்த ஆம்ஆத்மி வேட்பாளரின்  தாய்.

பஞ்சாப்பில் காங்கிரஸின் முதல்வர் சரண்ஜித் சன்னியை தேர்தலில் தோற்கடித்த ஆம்ஆத்மி வேட்பாளரின் தாய் பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணி செய்து வருகிறார். மகன் எம்எல்ஏவான நிலையிலும், ‛நான் துப்புரவு தொழிலாளி. ‛துடைப்பம்’ என் வாழ்க்கையில் முக்கியமானது. இந்த பணியை விடமாட்டேன்’ என கூறி தூய்மை பணியை மேற்கொண்டு வருகிறார். பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகள் உள்ளன.

ஒரே கட்டமாக பிப்ரவரி 14ல் தேர்தல் நடந்தது. ஓட்டுக்கள் மார்ச் 10 ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன இதில் கருத்து கணிப்புகள் கூறியபடி ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் 92 தொகுதிகளில் ஆம்ஆத்மி வெற்றி பெற்றது. காங்கிரஸ் வெறும் 18 தொகுதிகளிலும், எஸ்ஏடி 3, பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. மாஸ் ஏற்பாடு! பஞ்சாப்பில் ஒன்றாக நகர்வலம் செல்லும் கெஜ்ரிவால் -பகவந்த்.. ஆம்ஆத்மி பிரம்மாண்ட ஊர்வலம் முதல்வர், தலைவர் தோல்வி இந்த தேர்தலில் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சி துவங்கி பாஜக கூட்டணியுடன் போட்டியிட்ட காங்கிரஸ் முன்னாள் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் தேர்தலில் தோல்வி அடைந்தார்.

இவர் பதவி விலகிய பிறகு புதிய முதல்வராக பொறுப்பேற்ற சரண்ஜித் சிங் சன்னியும் காங்கிரஸ் சார்பில் தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவும் தேர்தலில் வெற்றி பெறவில்லை. செல்போன் பழுது நீக்கும் கடைக்காரர் குறிப்பாக முதல்வர் சரண்ஜித் சன்னி சாம்கவுர் சாஹிப் தொகுதியில் ஆம்ஆத்மி வேட்பாளரான கண் டாக்டர் சரண்ஜித் சிங்கால் என்பவரிடம் தோல்வியை தழுவினார்.

ஆனால் பதார் தொகுதியில் 37,558 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் செல்போன் பழுது நீக்கும் கடைக்காரரான சாதார ஆம்ஆத்மி வேட்பாளர் லாப் சிங்கிடம், சரண்ஜித் சன்னி தோல்வியடைந்தார். மேலும் லாப்சிங் அரசியல் பின்புலம் இல்லாதவர், கோடீஸ்வரரும் கிடையாது. இந்த சூழ்நிலையில் தான் ரூ.7.97 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துக்களையும், ரூ4 கோடி குடியிருப்பையும் கொண்டிருந்த முதல்வரை தோற்கடித்துள்ளார்.

இருப்பினும் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து கிராம மக்களுடன் லாப்சிங் தொடர்பில் இருந்தது தேர்தலில் கைக்கொடுத்தது. துப்புரவு தொழிலாளியாக தாய் இந்நிலையில் லாப் சிங்கின் தாய் பல்தேவ் கவுர், உகோக் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக இருக்கும் விஷயம் தெரியவந்துள்ளது. இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛பணம் சம்பாதிக்க நாங்கள் எப்போதும் கடினமாக உழைத்து வருகிறோம்.

எனது வாழ்க்கையில் துடைப்பம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. முதலில் எனக்கு வாழ்வளித்த இந்த துடைப்பம்(ஆம்ஆத்மி சின்னமும் துடைப்பம் தான்) தற்போது என் மகனை எம்எல்ஏவாக மாற்றியுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைகிறேன். முதல்வரை எதிர்த்து மகன் நிறுத்தப்பட்டாலும் அவன் வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கை இருந்தது. தற்போது வெற்றி பெற்றுள்ளான். ஆனாலும் நான் தொடர்ந்து பள்ளியில் துப்புரவு பணி செய்வேன்” என்றார்.

தொடர்ந்து பணி இதுபற்றி பள்ளி முதல்வர் அம்ரீத் பால் கவுர் கூறுகையில், ‛‛பல்தேவ் கவுர் நீண்ட காலமாக பள்ளியில் துப்புரவு பணியாளராக உள்ளார். லாப் சிங் இந்த பள்ளியில் தான் படித்தார். இது எங்களுக்கும் பெருமையாக உள்ளது. பல்தேவ் கவுர் தொடர்ந்து துப்புரவு பணியை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்” எனக்கூறினார். மக்கள் நலனை.. லாப்சிங் குறித்து அவரது தந்தையான கூலித்தொழிலாளி தர்சன் சிங் கூறுகையில், ‛‛மக்கள் அவனை எம்எல்ஏவாக தேர்வு செய்துள்ளனர். இதனால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அவன் செயல்பட வேண்டும்.

நாங்கள் தற்போது வாழ்வது போன்றே வாழ்க்கையை முன்னெடுப்போம்” என்றார். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில் ‛‛கட்சிக்காக இரவு, பகலாக உழைத்தார். தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கிடைக்கும், எம்எல்ஏவாக தேர்வாவார் என நினைக்கறவில்லை. ஆனால் இது நடந்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்றனர்.

Previous Story

இன்று நள்ளிரவு முதல் மா விலை அதிகரிப்பு!

Next Story

தத்தளிக்கும் இலங்கை! பலாலியில் இறங்கும் மோடி