மேற்குலக நாடுகளே முக்கிய காரணம்-உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!

உக்ரைன் நாட்டில் போர் 2 வாரங்களைக் கடந்தும் தொடர்ந்து வரும் சூழலில், அதிபர் ஜெலன்ஸ்கி மேற்குலக நாடுகளை திடீரென சாடியுள்ளார். உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப். 24ஆம் தேதி ரஷ்யா ஆரம்பித்த போர் இன்னும் கூட முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் ரஷ்ய எல்லை வழியாக மட்டுமின்றி, பெலராஸ் வழியாகவும் உக்ரைன் நாட்டில் புகுந்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது

இரு நாடுகளுக்கும் இடையேயான போர் 12ஆவது நாளாக இன்றும் தொடரும் நிலையில், இதனால் உக்ரைன் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள வெளிநாட்டினரும் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். எவ்வளவு கஷ்டம்! இது சாதாரண விஷயமல்ல! உக்ரைன் விவகாரத்தில் மோடியை பாராட்டிய மத்திய அமைச்சர்! உக்ரைன் போர் இந்தப் போர் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா ராணுவத்திற்கு இடையே 3 கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள நிலையில், இதுவரை அதில் எந்தவொரு உடன்பாடும் ஏற்படவில்லை. 2ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரு நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், அதனால் எந்தவொரு பலனும் இல்லாமல் போனது. இதற்கு இரு நாடுகளும் மாறி மாறி குற்றஞ்சாட்டிக் கொண்டன. உலக நாடுகள் இதற்கிடையே அடுத்தகட்டமாக வியாழக்கிழமை இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் துருக்கி நாட்டில் சந்தித்துப் பேச உள்ளனர். இந்தப் போரால் இரு நாடுகள் மட்டுமின்றி சர்வதேச பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தப் போர் காரணமாக அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் எனப் பலரும் கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன. இது ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உக்ரைன் நகரங்களை மேற்குலக நாடுகள் தான் காக்கத் தவறியதாகச் சாடியுள்ளார். கடந்த இரு வாரங்களாக உக்ரைன் நாட்டிற்குத் தேவையான உதவிகளை மேற்குலக நாடுகள் செய்யவில்லை என்றும் அதிபர் ஜெலன்ஸ்கி சாடியுள்ளதாக உக்ரைன் ஊடகமான தி கிவ் இண்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது. உலக நாடுகள் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைத் தடுக்க தவறிவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

மேற்குலக நாடுகள் இது தொடர்பாக அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், “உக்ரைன் நாட்டில் நடந்துள்ள படுகொலைகளுக்கு ரஷ்யாவே காரணம் என்றாலும், 13 நாட்களாக அத்தியாவசியமான நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இதில் பொறுப்பு உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. உக்ரைன் நகரங்களில் மீதான ரஷ்யாவின் குண்டு வீச்சுகளையும் ஏவுகணை தாக்குதல்களையும் தடுக்க வழி இருந்தும் கூட, அதை மேற்குலக நாடுகள் செய்யவில்லை.

மீட்பு நடவடிக்கை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூட மனிதாபிமான அடிப்படையில் செய்யப்படும் சேவைகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களில் அவர்களின் சின்னத்தைப் பயன்படுத்த அனுமதிக்கவில்லை. இது மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது” என்று அவர் சாடியுள்ளார். உக்ரைன் நாட்டில் இருக்கும் அப்பாவி மக்கள் இந்தப் போர் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிபர் ஜெலன்ஸ்கியின் இந்தக் கருத்து முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எதை சொல்கிறார் உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா குண்டு மழை பொழிந்து வருகின்றன. எனவே, உக்ரைனைப் பாதுகாக்கும் வகையில், அந்நாட்டின் வான்வழியைப் பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதியாக (No fly zone) அறிவிக்க வேண்டும் என அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார்.

இருப்பினும், இந்த கோரிக்கையை நேட்டோ அமைப்பு நிராகரித்தது. இது தொடர்பாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், “உக்ரைன் வான்வழியைப் பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்தால் அங்கு நுழையும் ரஷ்ய ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களை நேட்டோ படைகள் சுட்டு வீழ்த்த வேண்டும். இது போரை ஐரோப்பாவிலும் பரவச் செய்யும்” என்று கூறியிருந்தார். இதைச் சாடும் வகையிலேயே ஜெலன்ஸ்கி இப்போது மேற்குலக நாடுகளைச் சாடியுள்ளார்.

Previous Story

பவுண்டுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட பாரிய மாற்றம்

Next Story

முடிவை நோக்கி போர்! விட்டுக்கொடுக்க ரெடி! ரஷ்யாவிற்கு சாதகம்!?