ஆளைப் பொருத்தே நீதி!

நஜீப்

மாத்தறையில் நடைபெற்ற மக்கள் சக்திக் கூட்டத்தில் இந்த நாட்டில் ஆளைப் பொருத்துத்தான் நீதி வேலை பார்க்கின்றது. இன்னும் இரு நாட்களில் பசில் தொடர்பான வழக்கொன்றின் தீர்ப்பு வர இருக்கின்றது. அந்த தீர்ப்பை நான் முன் கூட்டியே சொல்லி விடுகின்றோன்.

குற்றம் சாட்டப்பட்வருக்கு  தீர்ப்பு: குற்றமற்றவர் என்ற காரணத்தால் ஆளுக்கு வழக்கிலிருந்து விடுதலை என்று சொல்லி இருந்தார் அணுர. அதே போன்று அந்தத் தீர்ப்பும் வழங்கப்பட்டிருந்தது. தேர்தல் பரப்புரைகளின் போது தெற்க்கில்-சிங்களப் பிரதேசங்களில் முஸ்லிம் ஆக்கிரமிப்பு பேரின அழிப்பு என்றெல்லாம் அச்சத்தை ஏற்படுத்தி வாக்கு வேட்டை நடந்தது.

கிழக்கில் முஸ்லிம் பிரதேசங்களில் ராஜபக்ஸாக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செய்துவரும் அட்டகாசங்களைச் சொல்லி பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக் கொண்டவர்கள் இன்று என்ன செய்தார்கள்.? இரு சமூகங்களும் இது பற்றி சிந்திக்க வேண்டும் என்று, தனது தலைவன் விஜேவீர பிறந்த தங்கல்லை மண்ணில் நடந்த பேரணியில் அறிவுரை வழங்கினார் அணுர குமார திசாநாயக்க.

Previous Story

ரஷ்யா-உக்ரைன் மோதல் இலங்கை மீதான தாக்கம்

Next Story

கேள்விக் குறியாகும் உக்ரைன் எதிர்காலம்-புதின்