தமிழ்-முஸ்லிம் தரப்பு சந்திப்பு!

நஜீப்

கடந்த 2021 நவம்பர் நடுப்பகுதியில் முன்னாள் மு.கா. செயலாளரும் சமாதானக் கூட்டமைப்பின் தலைவருமான ஹசனலியுடன் நாம் தொடர்பு கொண்டு வடக்கு கிழக்கில் நடக்கின்ற பேரின மேலதிக்கத்தை தடுத்து நிறுத்துவது பற்றி நீங்கள் தமிழ் தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் நடதினால் என்ன என்று கேள்வி எழுப்பினோம்.

நல்ல கருத்து  கூட்டணியுடன் பேசிப் பாருங்களேன் என்று அவர் நமக்குத் தந்த நல்ல செய்தியுடன் நாம் அன்றே சணக்கியன் எம்.பி.யைத் தொடர்பு கொண்ட போது அவரும் நல்ல விடயம் நான் தலைவர்களுடன் பேசுகின்றேன், சந்திக்கலாம் என்று நம்மிடம் சொன்ன அந்த பதிலை ஹசனலிக்கு எத்தி வைத்தோம்.

மூன்று மாதங்களுக்குப் பின்னர் அந்த சந்திப்பு நிந்தவூர் ஹசனலி வீட்டில்  கடந்த வாரம் நடந்திருக்கின்றது. சந்தோசம்-மகிழ்ச்சி. ஆனால் அது சம்பந்தன்-ஹக்கீம் சந்தர்ப்பவாத சந்திப்பாக அமையக் கூடாது.

தமிழ் முஸ்லிம் தரப்புக்கள் தமது சமூகங்களுடன் பிரச்சினைகளை முதலில் கலந்து பேசிவிட்டு பொது நிகழ்சி நிரலுக்கு வருவது ஆரோக்கியமாக இருக்கும். குழப்பியடிக்க பலதரப்புக்கள் இருப்பதால், முக்கோண  நிகழச்சி நிரல் பற்றிய நமது இந்த ஆலோசனையை முன்வைக்கின்றோம்.

நன்றி:ஞாயிறு தினக்குரல் 06.03.2022

Previous Story

'உக்ரைனில்  சண்டை: இனித்தான் ஆட்டமே துவங்கப் போகின்றது'

Next Story

'போர்' உக்ரைனுக்கு நெத்தியடி புதினுக்கு மார்பில் இடி!!