அடித்து நொறுக்குங்கள்-விலாடிமீர் புதின் மண்டியிடோம்-வொலடிமீர் ஜெலன்ஸ்கி

உக்ரைன் நாட்டில் 3ஆவது நாளாகப் போர் தொடரும் நிலையில், இது தொடர்பாக ரஷ்ய ராணுவம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. உக்ரைன் எல்லையில் கடந்த சில வாரங்களாகவே ரஷ்யா அதிகப்படியான ராணுவத்தைக் குவித்து வந்தது.

இந்தச் சூழலில் கடந்த வியாழக்கிழமை முழு வீச்சில் ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டிருந்தார் இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை தொடங்கிய போர், தொடர்ச்சியாக 3ஆவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.

உக்ரைன் போர் முன்னதாக நேற்றைய தினம் உக்ரைன் சண்டையிடுவதை நிறுத்தினால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தாயாராக உள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் அறிவித்து இருந்தார்.

அதேபோல உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் பேச்சுவார்த்தைக்கு புதினை அழைத்திருந்தார். இதனால் பேச்சுவார்த்தை மூலம் உக்ரைன் விவகாரம் முடிவுக்கு வரும் என அனைவரும் கருதினர். குறிப்பாக ரஷ்ய அதிபர் புதினும் பேச்சுவார்த்தைக்குக் குழு அமைக்கத் தாயாராக உள்ளதாக அறிவித்திருந்தார். பேச்சுவார்த்தை தோல்வி.

இதனிடையே போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் மறுத்துவிட்டதாக ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது. இதனால் தாக்குதலைத் தொடர்வதைத் தவிர தங்களுக்கு வழியில்லை என்றும் ரஷ்யத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இருப்பினும், நாங்கள் போரை நீட்டிக்கத் திட்டமிடுவதாக ரஷ்யா குற்றஞ்சாட்டி உள்ள நிலையில், ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்க முடியாது என்று உக்ரைன் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. உக்கிரமடைந்த போர் அதேபோல உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் ஒரு போதும் ரஷ்யாவிடம் சரணடைய மாட்டோம் என்றும் கடைசி வரை தாய்நாட்டிற்காகப் போராடுவோம் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனால் மீண்டும் போர் உக்கிரமடைந்துள்ளது. குறிப்பாக உக்ரைன் நாட்டை அனைத்து திசைகளில் இருந்தும் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தத் தனது ராணுவத்திற்கு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. ரஷ்யாவின் ராணுவ பலம் அதிகம் என்பதால் சில நாட்களில் உக்ரைனை முழுவதுமாக கைப்பற்றலாம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்த உத்தரவு முன்னதாக அனைத்து வீரர்களும் ஓய்வு பெறும் வகையில் தற்காலிக இடைநிறுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அப்போது தான் ரஷ்ய அதிபர் புதின் தனக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து நாடு தலைவர்களிடமும் பேசினார்.

இதே காலகட்டத்தில் தான் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் அமெரிக்கா தொடங்கி அனைத்து நாட்டுத் தலைவர்களிடமும் தங்களுக்கு உதவ வேண்டும் என்றும் ரஷ்யாவைத் தனிமைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இப்போது இடைநிறுத்தல் உத்தரவு வாபஸ் பெற உத்தரவிடப்பட்டுள்ளது உக்ரைன் அதிபர் வேதனை இருப்பினும், இதுவரை எந்தவொரு நாடும் போரில் நேரடியாக இறங்கவில்லை.

அமெரிக்காவும் கூட ரூ 26 ஆயிரம் கோடி மதிப்பாலான ராணுவ உதவிகளை வழங்குவோம் என்றே அறிவித்தார். ஐரோப்பிய நாடுகளும் கிட்டதட்ட இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளன. உக்ரைன் நேட்டோ அமைப்பிலும் இல்லை என்பதால், நேட்டோ அமைப்பும் இதில் நேரடியாகத் தலையிட முடியாத சூழல் ஏற்பட்டது.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உலக நாடுகள் உக்ரைனைத் தனித்துவிட்டதாக அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி கூட வேதனை தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில் தான், அனைத்து அனைத்து திசைகளில் இருந்தும் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்த ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.

Previous Story

வரலாற்றில் புது அத்தியம்!

Next Story

நீதிக்கும்-பொலிசுக்கும் லடாய்