கட்டணத்தை செலுத்தாத அமைச்சர் கெஹெலிய

கொழும்பு சரண வீதியில் அமைந்துள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டுக்கு வழங்கிய மின்சாரத்திற்கான ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் கட்டணம் குறித்து இலங்கை மின்சார சபை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளளது. அந்த கடிதம் தற்போது ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 11 ஆம் திகதி இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் இந்த சடிதத்தை அமைச்ருக்கு அனுப்பி வைத்துள்ளார். இலக்கம் 400 கீழ் 53 சரண வீதி (ஓப் புல்லர்ஸ்) வீதி கொழும்பு 7 என்ற முகவரியில் உள்ள அமைச்சரின் வீட்டு விலாசத்திற்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி விலாசத்தில் உள்ள வீட்டுக்கு மின்சாரத்தை விநியோகித்தமைக்கான அமைச்சர் வசித்த காலப் பகுதியில் அதாவது 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 21 வரையான காலத்திற்கு ஒரு கோடியே 20 லட்சத்து 56 ஆயிரத்து 803.38 ரூபாய் செலுத்தப்பட வேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை கொழும்பு சரண வீதியில் உள்ள வீட்டில் வசிக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மின் கட்டணத்தை செலுத்தவில்லை என ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன.

மின் கட்டணத்தை செலுத்தாமல் இருப்பது அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல என்ற தகவலை மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். அத்துடன் மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனுப்பியுள்ள கடிதம் பற்றியும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Previous Story

யுக்ரேனின்  ரஷ்யா குண்டு மழை

Next Story

யுக்ரேனில் இனி பாதுகாப்பான இடம் ஒன்று இல்லை: பிபிசி யுக்ரேன் சேவை ஆசிரியர்