யுக்ரேனின்  ரஷ்யா குண்டு மழை

யுக்ரேன் மீது எல்லை தாண்டி ரஷ்ய படைகள் மிகப்பெரிய அளவிலான ராணுவ தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில், முக்கிய நகரங்களுக்கு அருகே ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன. எங்கு தாக்குதல்கள் நடக்கின்றன என்பது குறித்து தற்போது பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

யுக்ரேன் தலைநகர் கீஃப்-ஐ நோக்கி பயணிப்பவர்களும், கீஃப்-ன் மேற்கு பகுதிகளிலிருந்து பயணிப்பவர்களும் தற்காலிகமாக அங்கிருந்து தங்களுடைய நகரங்களுக்குத் திரும்ப அறிவுறுத்தப்படுகின்றனர். குறிப்பாக, மேற்கு எல்லை நாடுகளில் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுங்கள்.இதுதொடர்பான மேலதிக ஆலோசனைகள் உடனுக்குடன் வெளியிடப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடந்தது என்ன?

யுக்ரேன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை அறிவித்துள்ளது. இந்த நேரலை பக்கத்தில் நீங்கள் இப்போதுதான் இணைந்தீர்கள் என்றால், இதுவரை நடந்தது என்ன என்பதை இங்கே அறியுங்கள்:

யுக்ரேனின் டோன்பாஸ் பிராந்தியத்தில் ராணுவ நடவடிக்கையை தொடங்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். இதனை தொலைக்காட்சி உரை மூலம் அவர் அறிவித்தார். யுக்ரேன் விவகாரத்தில் அவர் அமைதி காக்க வேண்டும் என, ஐநா பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்திய நிலையில் புதின் இவ்வாறு அறிவித்தார்.

யுக்ரேன் ராணுவத்தை அங்கிருந்து அகற்றுவதே இந்த “சிறப்பு ராணுவ நடவடிக்கையின்” நோக்கம் என, புதின் தொலைக்காட்சி உரையில் தெரிவித்தார்.

யுக்ரேனின் பல பகுதிகளில் ஏவுகணை தாக்குதல்கள் நடைபெற்றதாக செய்திகள் வருகின்றன. தலைநகர் கீஃப்-ல் கூட இத்தகைய தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

“பரவலான தாக்குதல்” நடத்துவதாக ரஷ்யா மீது யுக்ரேன் வெளியுறவு துறை அமைச்சர் குற்றம்சாட்டினார். இதனை நிறுத்த சாத்தியமான அனைத்தையும் ஐநா மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களை கொல்லும் முன்தயாரிப்புடன் கூடிய போரை ரஷ்ய அதிபர் புதின் தேர்ந்தெடுத்துள்ளதாக, பைடன் தெரிவித்தார்.

பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், ஐநா, நேட்டோ ஆகியவற்றின் தலைவர்களும் ரஷ்யாவின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

யுக்ரேன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இந்நிலையில், யுக்ரேன் தொடர்பான தகவல்களை பெற டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் (பொதிகை இல்லம்) வரவேற்பறையில் உதவி முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

பாதி வழியில் திரும்பிய விமானம்

இந்தியர்களை அழைத்து வர டெல்லியில் இருந்து யுக்ரேன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அங்கு நிலவி வரும் மோசமான சூழ்நிலையால் நடுவானிலேயே தாயகம் திரும்ப உத்தரவிடப்பட்டது.

ஏஐ 1947 என்ற எண் கொண்ட அந்த விமானம் டெல்லி விமான நிலையத்தில் இருந்து காலை 7:30 மணியளவில் யுக்ரேனிய தலைநகர் கீஃப்வுக்குப் புறப்பட்டது. புறப்பட்ட நேரத்தில் இருந்து ஆறரை மணி நேரத்தில் அது அங்கு சென்றிருக்க வேண்டும்.

ஆனால், இரான் வான் பரப்பில் இருந்தபோது அந்த விமானம் திரும்பி தாயகம் வர முடிவெடுக்கப்பட்டது.கீஃப்வில் தொடரும் குண்டு மழை பொழிவைத் தொடர்ந்து யுக்ரேனின் வான் பாதை பயணம் மூடப்பட்டிருக்கிறது. இதையடுத்தே இந்திய விமானம் டெல்லிக்கு திரும்பி இருக்கிறது.

இந்திய மக்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

யுக்ரேன் தலைநகர் கீஃப்-ல் உள்ள இந்திய தூதரகம், இந்திய குடிமக்கள் மற்றும் மாணவர்களுக்காக இன்று வெளியிட்ட அறிவிப்பில், “யுக்ரேனின் வான்வெளிப் பயணம் மூடப்பட்டதால், சிறப்பு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. யுக்ரேனிலிருந்து இந்திய குடிமக்கள் வெளியேற மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஏற்பாடுகள் இறுதி செய்யப்பட்டவுடன், விரைவில் அதுகுறித்த தகவல்களை தூதரகம் தெரிவிக்கும். இதன்மூலம், இந்திய குடிமக்கள் அந்நாட்டின் மேற்கு பகுதிக்கு இடம்பெயர முடியும்.

அனைத்து நேரமும் உங்களின் பாஸ்போர்ட்டுகள் மற்றும் அவசியமான ஆவணங்களை உடன் வைத்திருங்கள். உடனடி தகவல்களை அறிய தூதரகத்தின் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களை (முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம்) பின்பற்றுங்கள்” என தெரிவித்துள்ளது.

மேலும், தூதரகத்தை தொடர்புகொள்ள உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் உலகப் போர் தொடக்கமா?

“அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள ஆரம்பித்தால், அது ஓர் உலகப்போர் தான்,” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார்.

ரஷ்யாவின் இலக்கு என்ன?

ரஷ்யாவின் இலக்குக்கு உள்ளான கார்கிஃப் அருகே உள்ள ராணுவ விமான நிலையம். யுக்ரேனின் ராணுவ கட்டமைப்பு மற்றும் எல்லை பாதுகாப்புப் பிரிவுகள் மீது ரஷ்யா முதலில் தாக்குதலை தொடங்கியதாக, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். பின்னர், ரஷ்ய ராணுவ வாகனங்கள் வடக்கில் கார்கிஃப்பிலும், கிழக்கில் லுஹான்ஸ்க்கிலும், தெற்கில் ரஷ்யா கைப்பற்றிய கிரைமியாவிலும், பெலாரூஸிலும் எல்லையை தாண்டியதாக, யுக்ரேன் படைகள் தெரிவித்துள்ளன.

கீஃப்-ல் உள்ள போரிஸ்பில் சர்வதேச விமானநிலையம் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்த விமான தளங்களுள் ஒன்று எனவும், கீஃப்,ட்னிப்ரோ, கார்கிஃப், மரியுபோல் ஆகிய பெருநகரங்களில் உள்ள ராணுவ தலைமையகங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் ஆகியவற்றிலும் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக, யுக்ரேன் ராணுவம் தெரிவித்துள்ளது.

யுக்ரேன் எல்லையில் 2,00,000 படைவீரர்கள், போர் வாகனங்களை ரஷ்யா நிறுத்தியுள்ளது என, ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.கார்கிஃப் அருகே உள்ள ராணுவ விமான நிலையமும் ரஷ்யாவின் இலக்குக்கு உள்ளானதாக, யுக்ரேன் தெரிவித்துள்ளது.

எகிறிய எண்ணெய்

யுக்ரேன் – ரஷ்யா மோதல்: ஏடிஎம்-இல் வரிசை, எகிறிய எண்ணெய் விலை யுக்ரேன் பதற்றம் அதிகரித்து வருவதால், எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலருக்கும் மேல் உயர்ந்துள்ளது. அதிபர் புதின் கிழக்கு யுக்ரேனில், ராணுவ தாக்குதலைத் தொடங்கிய பிறகு, கடந்த ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக எண்ணெய் விலை 100 டாலர்களுக்கும் மேல் உயர்ந்துள்ளது.

யுக்ரேனின் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஏடிஎம் வாசல்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். முழு விவரங்களைத் தெரிந்து கொள்ள

7 பேர் உயிரிழப்பு

ரஷ்ய படைகளின் வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளதாக, யுக்ரேன் காவல்துறை தெரிவித்துள்ளது.ஒடேசாவுக்கு வெளியேபொடில்ஸ்க்கில் உள்ள ஒரு ராணுவப்பிரிவின் மீது நடைபெற்ற தாக்குதலில், 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

19 பேர் காணாமல் போயுள்ளனர்.

மரியுபோல் நகரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சில மணிநேரங்களுக்கு முன்னதாக, யுக்ரேன் மீது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ராணுவ நடவடிக்கையை அறிவித்தார்.

இதையடுத்து, யுக்ரேன் தலைநகர் கீஃப்-ல் பெரும்பாலான மக்கள் மெட்ரோ ரயில் நிலையங்களில் அடைக்கலம் புகுந்தனர். பெரும்பாலானோர் பேருந்துகள் மூலம் நகரத்தை விட்டு வெளியேறுகின்றனர். மேலும், பலர் கார்களிலும் நகரத்தை விட்டு வெளியேற முயற்சித்ததால், பல கார்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

விமானப்படை தாக்குதல் நடைபெறுவதாக உணர்த்தும் எச்சரிக்கை ஒலி கீஃப் முழுதும் ஒலித்ததையடுத்து, மக்கள் மெட்ரோ நிலையங்களில் அடைக்கலம் புகுந்தனர். பெரும்பாலானோர் தங்கள் உடைமைகளையும் கொண்டு வந்தனர். விமானப்படை தாக்குதல் நடைபெறுவதாக உணர்த்தும் எச்சரிக்கை ஒலி கீஃப் முழுதும் ஒலித்ததையடுத்து, மக்கள் மெட்ரோ நிலையங்களில் அடைக்கலம் புகுந்தனர். பெரும்பாலானோர் தங்கள் உடைமைகளையும் கொண்டு வந்தனர்.

நடப்பது ஏன்? எளிய விளக்கம்

யுக்ரேனின் டோன்பாஸ் பிராந்தியத்தில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்க ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். ஆங்காங்கே தாக்குதல்கள் தொடங்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

ரஷ்ய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன

ரஷ்யாவின் 5 விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக, யுக்ரேன் ஆயுதப்படைகள் தெரிவித்துள்ளன.

“அமைதியாக இருங்கள். யுக்ரேன் ஆதரவாளர்களை நம்புங்கள்” என, யுக்ரேன் ஆயுதப்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், ரஷ்ய விமானங்கள் சுட்டு

கீஃப்வில் உள்ள பிபிசியின் செய்தியாளர் பால் ஆடம்ஸ், கீஃப்வில் ஐந்து முதல் ஆறு குண்டுவெடிப்புகள் கேட்டதாகத் தெரிவித்தார்.

யுக்ரேன் ஐ.நா தூதர் செர்ஜி கிஸ்லிட்யா, ரஷ்யாவின் ஐ.நா தூதர், யுக்ரேன் மீது போர் அறிவித்ததை “தனது அதிபர்” உறுதிபடுத்தியதாகத் தெரிவித்துள்ளார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

யுக்ரேன் வெளியுறவுத் துறை அமைச்சர், “புதின் யுக்ரேனில் முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியுள்ளார்,” என்று ட்வீட் செய்துள்ளார்.

அமெர்க்க அதிபர் ஜோ பைடன், யுக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பேசியதாகவும் சர்வதேச கண்டனங்களைத் திரட்டுவதற்கு அவர் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து தனக்கு விளக்கம் அளித்ததாகவும் கூறியுள்ளார்.

யுக்ரேனில் ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்தது பற்றிய செய்திகளை அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி உறுதி செய்ததாக ராய்டர்ஸ் செய்தி முகமை கூறுகிறது.

தலை நகரிலிருந்து தப்பிக்க முயலும் மக்கள்

மாஸ்கோ நேரப்படி, அதிகாலை 5.55 மணிக்கு யுக்ரேனுக்கு ராணுவ தாக்குதலை அறிவித்தார் புதின். சில நிமிடங்களுக்குப் பிறகு யுக்ரேனில் முதல் ஷெல் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் கீவ்வில், அவசரக்கால சைரன் ஒலிக்கப்பட்டது. மேலும் மக்கள் நகரத்தை விட்டு வெளியேறும் போது கார்களின் வரிசை விரைவுச் சாலையை அடைத்திருப்பதைப் படங்கள் காட்டுகின்றன. சமூக ஊடக சாட்சியங்கள் வளர்ந்து வரும் அச்ச உணர்வைப் பற்றிப் பேசுகின்றன. சிலர் தாங்கள் வெடிகுண்டு கூடாரங்களுக்கும் அடித்தளங்களுக்கும் விரைந்ததாகக் கூறுகின்றனர்.

மக்கள் தெருக்களில் குழுமியிருந்து பிரார்த்தனை செய்வதை தொலைகாட்சி காணொளிகள் காட்டுகின்றன. கீவ்வில் உள்ள கார்டியன் செய்தியாளர் லூக் ஹார்டிங் ட்விட்டரில் மக்கள் ஏடிஎம் இயந்திரங்களின் முன் வரிசையில் நிற்பதாகக் கூறியுள்ளார்.

Previous Story

வத்திகான் பறந்த பேராயர்! அறிக்கை சமர்ப்பித்தார் கோட்டா!!

Next Story

கட்டணத்தை செலுத்தாத அமைச்சர் கெஹெலிய