தங்கப் பதக்கம் வேண்டுமா!

நஜீப்

நன்றி 29.11.2026  ஞாயிறு தினக்குரல்

அண்மையில் கிழக்கில் ஒரு வைபவத்தில் மு.கா.தலைவர் பகிரங்கமாக பேசிய கதை இது. மு.கா.தலைவராக அஸ்ரஃப் இருந்த போது 1996ல் பாகிஸ்தான்-லாகூரில் நடந்த இறுதி கிரிக்கட் போட்டியை பார்க்க அவர் போய் இருந்தார்.

அது போலவே 2014ல் வங்காளதேச-டாக்காவில் நடந்த டுவென்டி டுவென்டி போட்டியை நேரடியாக பார்க்க நானும் போய் இருந்தேன்.

மு.கா. தலைவர்கள் நேரடியாக பார்க்கப் போகின்ற போதுதான் எமது அணிகள் வெற்றிக் கிண்ணங்கள் கிடைக்கின்றன.

இதனால் அந்த வெற்றியில் மு.கா. தலைமைகளுக்கும் பங்கிருக்கின்றது. இந்தக் கதையை எப்படி எடுத்துக் கொள்வது என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்.

மக்கள் தீர்மானம் எப்படியும் போகட்டும். நாம் அனுர-என்பிபி. அரசுக்கு முன்வைக்கின்ற வேண்டுகோள்:

2028ல் அமெரிக்க லோஸ்ஏஞ்சலில் நடக்கின்ற ஒலிம்பிக் போட்டியை பார்க்கின்ற வாய்ப்பை மு.கா.தலைவர் ஹக்கீமுக்கு அரசு தவறாது செய்து கொடுக்க வேண்டும்.

அனைத்து தங்கப் பதக்கங்களும் நமக்குத்தான். கடவுளே இப்படியும் பேச்சுகளா!

Previous Story

குறை  மாத பிரசவமே அனுர அரசு!

Next Story

රෝහණ විජේවීරව,අත්අඩංගුවට ගත්,හමූදා ලොක්කාව හා බිරිඳව,ඝාතනය.කෙහෙළිය හා තිස්ස අත්තනායක හවුල්.