வருவது பசிலா நாமலா?

நஜீப்

2024 ல் நடக்கின்ற ஜனாதிபத் தேர்தலுக்கு ராஜாக்கள் மத்தியில் தற்போது பனிப் போரொன்று துவங்கி இருக்கின்றது என்று அந்த வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது. தற்போய ஜனாதிபதி ஜீ.ஆர். தேர்தல் களத்துக்கு வரப் போவதில்லை என்பது உறுதி. இதனால் பீ.ஆர். களத்தை தனக்கு ஏற்றவாறு சரி செய்கின்ற பணியில் துரிதமாக இறங்கி இருக்கின்றார்.

அனுராதபுர சல்காது கூட்டம் கூட இதன் ஒரு ஏற்பாடுதான். மொட்டு அணியில் இருப்பவர் தற்போது பீ.ஆர். பின்னால்தான் ஓடித் திரிகின்றார்கள். பிரதமர் எம்.ஆர். தனது அரசியல் வாரிசு நாமலின் அரசியல் எதிர் காலம் தொடர்பில் தற்போது சந்திப்புக்களை நடத்திக் கொண்டு வருகின்றார் என்றும் தெரிகின்றது.

ஆனால் இரட்டைப் பிரசைக்காரருக்குத்தான் அதிக வாய்ப்பு. வெற்றி பெற முடியாவிட்டாலும் எதிர்க் கட்சித் தலைமைப் பதவியை அடைவதுதான் குறைந்த பட்ச இலக்காம். அதே நேரம் விமல் தரப்பும் மைத்திரியின் சு.கட்சியுடன் அரசியல் கூட்டணியொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் திரைமறைவில் நடந்து வருகின்றது என்றும் தெரியவருகின்றது.

நன்றி:ஞாயிறு தினக்குரல் 20.02.2022

 

Previous Story

Next Story

அரசுக்கு சர்ச்சை ஏற்படுத்திய கம்மன்பில