நாங்களும் ஜேவிபி. தான்

-நஜீப்-

ராஜபக்ஸாக்களின் கோட்டையான ஹம்பாந்தோட்டையில் அண்மையில் மொட்டு அணியினர் கூட்டம் ஒன்று நடந்திருக்கின்றது. அதில் ராஜாக்களில் அரசியல் வாரிசு விளையாட்டுக்காரர் பேசிக் கொண்டிருக்கின்ற போது கூட்டத்தில் இருந்த  ஒருவர் எழுந்து நின்று இதுவரை காலமும் நாங்கள் உங்களுக்கு பின்னால் அரசியல் செய்திருக்கின்றோம்.

நீங்கள் எம்மை ஏமாற்றியதும் எமக்குத் தந்த துன்பங்களும் போதும். நாங்களும் இதன் பின்னர் ஜேவிக்குத் தான் என்று நாமலைப் பேச விடாது அங்கு ரகலை செய்திருக்கின்றார். விளையாட்டுக்காரர் அந்த மனிதனை சிரித்துக் கொண்டு சமாளிக்க முனைந்திருக்கின்றார்.

முன்பு தள்ளி நின்று ஹூ… வைத்தவர்கள் இப்போது அவர்கள் கூட்டத்துக்கே போய் கோஷம் போட ஆரம்பித்திருக்கின்றார்கள். அம் மனிதன் பேசுகின்ற போது கைதட்டல்களும் நடந்திருக்கின்றது. இது துரித முன்னேற்றம் என்று எடுத்துக் கொள்ள முடியும். இந்த வீடியோ இப்போது காட்டுத் தீ போல வைரலாகி வருகின்றது.

நன்றி:ஞாயிறு தினக்குரல் 20.02.2022

Previous Story

ஏமாற்றுத் தந்திரமும் ஜெனீவா மந்திரமும்!

Next Story

உணவும் உடல்நலமும்:  நுண்ணுயிரிகளை மகிழ்விக்க 5 வழிகள்