நஜீப்
நன்றி 15.11.2026 ஞாயிறு தினக்குரல்
1.அப்பனுக்கு பின்னர் பிள்ளைகள்தான் பதவிக்கு வர வேண்டும். அப்போதுதான் அனுபவத்துடன் நாட்டில் சிறப்பாட்சி நடக்கும். கஸ்ஸப தேரர் சஜித்-நாமலுக்கு வழங்கும் சான்றிதழ்.!
2.எதிரணி அரசியல் செயல்பாட்டாளர்கள் தமது ஆதரவாலர்களை உற்சாகப்படுத்துவதற்கு இந்த நாட்களில் பல விதமான கட்டுக்கதைகளை சந்தைப்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.!
3.வெளி நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட போலி வாகனம் தொடர்பான குற்றத்தை ஏற்றிருக்கும் ஜொனியின் வழக்குத் தீர்ப்பு நவம்பர் 25ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.!
4.அகுரண பிரதேச சபை பிரதிநித்துவம் தொடர்பில் மு.கா. தலைவர் வாக்குறுதியை நிலை நாட்ட வேண்டும் எனக் கேட்டால் முள்ளை எடுக்க முள்தேடுவதாக தலைவர் பதிலாம்!
5.ஐஓடிபி.யூடிபரின் குண்டசாலை வீடு எரிக்கப்பட்டிருக்கின்றது. போதை-பாதாள மற்றும் ஊழலுக்கு எதிரான சமூக செயல்பாட்டாளர் அஜித் தர்மபால என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
6.அமெரிக்க செனட் தேர்தலில் அலாஸ்கா,மிசிசிப்பி மாநிலங்களை ஜனநாயகக் கட்சி ஜெயித்தது மொத்தம்56. குடியரசுக்கு-44. என்ற நமது கணிப்பு இன்று(12.11.2027)உறுதியாகியுள்ளது.!
7.ஈரான் இஸ்லாமிய ஆட்சியை கவிழ்க்காமல் ஒரு போதும் அவர்கள் அணு குண்டை தயாரிப்பதை தடுக்க முடியாது என்று புதிய நாடாளுமன்றில் நெதன்யா அதிரடி எச்சரிக்கை.!




