நஜீப்
நன்றி 08.11.2026 ஞாயிறு தினக்குரல்
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ட்ரம்பின் குடியரசுக் கட்சி மோசமான பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது.
தான் இந்தத் தேர்தலில் நின்றிருந்தால் எனது அணி வெற்றி பெற்றிருக்கும் என்று ட்ரம்ப் கதை விட்டுக் கொண்டிருக்கின்றார்.
ஜனநாயக் கட்சி தேர்தலில் சிறப்பாக செயல்பட்டிருக்கின்றது. தனது ஆட்கள் கோட்டை விட்டுவிட்டார்கள் என்றும் ட்ரம்ப் சாடுகின்றார்.
கட்சியை வழிநடாத்தியவரே பெரியவர்தானே.! அப்போ நீங்கள்தானே ஐயா அதனை சரி செய்திருக்க வேண்டும்.?
இறுதி முடிவுகளின் படி மொத்தமுள்ள செனட் உறுப்பினர்களில் ஜனநாயக் கட்சிக்கு 54+2. ட்ம்பின் குடியரசுக்கு 44 உறுப்பினர்கள்.
மொத்த 435 மக்கள் அவை உறுப்பினர்களில் ஜனநாயக் கட்சிக்கு 258 ஆசனங்கள். ட்ரம்பின் குடியரசுக்கு 167. (10…..?)
தேர்தலில் ட்ரம்ப் மிகவும் அநாகரிகமான வார்த்தைகளைப் பேசி எதிரணி வேட்பாளர்களை அவமதித்திருந்தார்.
தேர்தல் முடிவுகள் ட்ரம்ப் மீதான மக்களுக்கு இருந்த வெறுப்பைதான் வெளிப்படுத்தி இருக்கின்றது. இது கட்சிக்காரகளின் குற்றச்சாட்டு.




