கூரையுடன் பறந்த அரசு!

நஜீப்

நன்றி 01.11.2026  ஞாயிறு தினக்குரல்

அரசியல் மாற்றங்கள் எந்த உருவத்தில் வேண்டுமானாலும் வரலாம். இனம் மதம் தொழிலாளர் போராட்டங்கள் பொருட்களின் விலை ஏற்றம் இப்படியெல்லாம் காரணங்களால்-அலைகள் அரசாங்கங்களை மாற்றி இருக்கின்றன. ஆனால் ஒரு ரயில் நிலையத்தின் கூரை பறந்ததால் அந்த நாட்டு அரசாங்கமே தூக்கி வீசப்பட்ட கதைதான் இது.

சேர்பியாவில் 2024ல் ரயில் நிலையம் ஒன்று இடிந்து வீழ்ந்ததால் அதில் 16பேர் மரணம் அடைந்து நூற்றுக்காணக்கானவர்கள் காயப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் பேராசிரியர்கள் அரசுக்கு எதிரான போராட்டத்தை துவங்கி அந்த அலை இன்று பதவியில் இருந்த அரசாங்கத்தையே தூக்கி வீசி இருக்கின்றது.

தாங்கள் அணி யாரை அதிகாரத்துக்குக் கொண்டு வரப்போகின்றோம் என்று கூட தெரியாத நிலை தேர்தல் முடிவுகள் வரை நீடித்ததாகவும் சொல்லப்படுகின்றது. மொத்தம் உள்ள 250 ஆசனங்களில் அவர்கள் 141 ஆசனங்களைக் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous Story

අද ෆයිනල් තරඟයට නොසිතු වෙනසක්

Next Story

கதறலும் மௌனமும்!