மோசமாக சரிந்த ஐபோன் விற்பனை.. வேற வழியில்லாமல் ஆப்பிள் எடுத்த முடிவு

ஆப்பிள் நிறுவனத்தை பொறுத்தவரை எப்போதுமே தனது புதிய மாடல்களை செப்டம்பர் மாதம் தான் வெளியிடும். குறைந்த திறன் கொண்ட e மாடல்களை மட்டுமே நடுவே வெளியிடும். ஆனால், இந்தாண்டு செப்டம்பர் மாதம் ப்ரோ மற்றும் மேக்ஸ் மாடல்கள் மட்டுமே வெளியானது. வழக்கமான 18 வெளியாகவில்லை.

Apple iPhone

ஆப்பிள்

ஏஐ வளர்ச்சி காரணமாக ரேம் சிப் விலை எக்குத்தப்பாக எகிறியுள்ள நிலையில், அதை சமாளிக்க முடியாமலே ஆப்பிள் வழக்கமான 18ஐ வெளியிடாமல் ப்ரோ மற்றும் மேக்ஸ் மாடல்களை மட்டுமே வெளியிட்டதாக சொல்லப்பட்டது.

இருப்பினும், இந்த விலை அதிகமாக இருந்ததால்.. விற்பனை பெரியளவில் அதிகரிக்கவில்லை. இந்தச் சூழலில் தான் ஆப்பிள் வழக்கமான மாடல்களை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கமான ஐபோன் 18, ஐபோன் 18e மற்றும் ஐபோன் ஏர் 2 ஆகியவை 2027ம் ஆண்டின் தொடக்கத்தில், அதாவது பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதத்துக்குள் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் புதிய ஐபோன் மாடல்களை அறிமுகப்படுத்தும் சீசனை ஆப்பிள் மாற்றி அமைத்துள்ளது. விற்பனை சரிந்ததும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

மாற்றம்

வழக்கமாக செப்டம்பர் மாதத்தில் புதிய ஐபோன்கள் அறிமுகமாகும் நிலையில்.. புதிய மாடல்களை வெவ்வேறு காலகட்டங்களில் அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் விலை பற்றி கவலை இல்லாத நபர்கள் பண்டிகை காலத்தில் ப்ரோ, மேக்ஸ் வெளியான போதே வாங்கிவிடுவார்கள். விலை பற்றி யோசிப்பவர்கள் கொஞ்சம் காத்திருந்து வழக்கமான மாடல்களை வாங்கலாம். இருப்பினும், இது குறித்து ஆப்பிள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

அதேநேரம் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, ஐபோன் 18 மாடலின் உற்பத்தி 2026 நவம்பர் மாத இறுதியில் தொடங்கலாம் என தெரிகிறது.

Apple Debuts New Foldable iPhone Duo, New CEO and New (Higher) Prices - WSJ

2027 தொடக்கத்தில் அறிமுகப்படுத்தும் முன்பு கையில் போதியளவில் ஸ்டாக் வைத்திருக்கும் வகையில் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விலை குறைந்த மாடல்கள்

ஐபோன் 18ல் 6.3 இன்ச் LTPO OLED திரை, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் மேம்படுத்தப்பட்ட பிரகாசம் இடம்பெறலாம். டைனமிக் ஐலேண்ட் அளவும் குறைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்புறத்தில் இரண்டு கேமராக்கள் இருக்கும். கேமராவை பொறுத்தவரை, பின்புறத்தில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 48 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு கேமரா இருக்கும். முன்பக்க கேமரா 18 அல்லது 24 மெகாபிக்சல் கேமரா இருக்கும் என தெரிகிறது.

Apple's new iPhone Duo comes with a nostalgic twist and eye-watering price tag - Yahoo News Australia

இதில் 2 நானோமீட்டர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் A20 சிப், C2 மோடம் மற்றும் iOS 27 ஆகியவை இடம்பெறலாம். ரேம் குறித்து உறுதியான தகவல்கள் இல்லை. சில்வர், பிங்க், டார்க் ப்ளூ, பர்கண்டி ஆகிய கலர்களில் இந்த போன் வெளியாகும் என தெரிகிறது.

ஐபோன் 18e, ஏர் 2ல் என்ன புதுசு?

குறைந்த விலையில் ஐபோன் வாங்க விரும்புபவர்களுக்கான ஐபோன் 18e மாடலும் வருகிறது. அதேபோல ஐபோன் ஏர் 2 மாடலில் 6.5 இன்ச் திரை, டைட்டானியம் டிசைன், A20 Pro சிப் மற்றும் 12GB ரேம் இடம் பெறும் என தெரிகிறது.

வழக்கமான ஐபோன் 18 விலை SL.RS.350000.00 முதல் இருக்கும் என தெரிகிறது.

ஐபோன் 18e விலை SL-RS.280000.00ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது.

அதேபோல ஐபோன் ஏர் 2 மாடல் SL-RS..520000.00ல் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Story

அமெரிக்கா.. நெதன்யாகு காலி! இஸ்ரேலிலிருந்து தகவல்!

Next Story

ගුටිකන කසුන්ලා, මදාවි සාරලා හාපිස්ටන් සාදුලාගේ පවුල් කතා | නන්දන වීරරත්න සමඟ