நஜீப்
நன்றி: 11.10.2026 ஞாயிறு தினக்குரல்
எங்கே சொன்னபடி எங்களைக் கைது செய்துவிட்டீர்களா துணிவிருந்தால் நாமலை ஒரு நாள் உள்ளே போட்டுப்பார் என்ற வார்த்தைகளை நாம் சில காலங்களுக்கு முன்னர் கேட்டிருக்கின்றோம்.
அப்போது மிகவும் நிதானமாக அதற்குப் பதில் கொடுத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக தயவு செய்து கைதுகள் நடக்கின்ற போது கதறாதீர்கள் என்று சொல்லி இருந்தார்.
இப்போது சங்கிலித் தொடர்போல கைதுகள் நடக்கின்றன. அன்று வீரவார்த்தைகள் பேசியவர்கள் ஜனாதிபதி சொன்னது போல கதறிக் கொண்டிருக்கின்றார்கள்.
அந்தக் கதறல்கள் எனது காதுகளுக்கு கேட்காது என்று அதற்கும் ஜனாதிபதி லாவகமாக பதில் கொடுத்திருக்கின்றார். இது தேர்தல் காலங்களில் என்பிபி. மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிதான்.
வரலாற்றில் என்றுமில்லாத காட்சிகள்தான் இவை. இந்தக் கைதுகளால் மோசடிக்காரர்கள் அதிர்ந்து போய் நிற்கின்றார்கள்.
இதற்கு அவர்கள் ஜனாதிபதியை பலிவாங்கவும் இடமிருக்கின்றது என்று நாம் எச்சரிக்கை செய்கின்றோம்.





