நஜீப்
நன்றி: 11.10.2026 ஞாயிறு தினக்குரல்
1.ரணில் மஹிந்த கோட்டா சிரந்தி போன்றவர்களை சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்துவார்கள்-விசாரிப்பார்கள் என்றுநாட்டில் எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.!
2.விஐபிக்கள் கைதானால் நாட்டில் பெரும் அதிர்வலைகள்-போராட்டங்கள் வெடிக்கும் என்று சிலர் எதிர்பார்த்தனர். ஆனால் இவற்றை எவரும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை!
3.ஞானத்தார் காவி உடை களையப்பட்டதற்கு சஜித்-நாமல் எதிர்ப்பு.!ரணில்-சஜித் நல்லாட்சி நடாத்திய காலத்திலும்சிறையில் இருந்த ஞானம் ஜம்பர் தானே ஐயா போட்டிருந்தார்.!
4.வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஜனாதிபதி மனைவி வெலிக்கடை சிறையில். உள்ளே மகன் அந்தப்பக்கம். தாய் இந்தபக்கம், இது உலக சாதனையோ என்னவோ தெரியாது!
5.சிரந்தியின் கொழும்பு சுதுலெ;ல சிரிலிய வங்கிக் கணக்கில் நூறு முறைக்கும் மேலாக பணம் போடப்பட்டுள்ளது. அதேபோன்ற எண்ணிக்கையில் காசு மீளவும் பெறப்பட்டுள்ளது!
6.தனி நபர்களுக்காக சட்டதையோ விதிமுறைகளையோ தன்னல் மாற்ற முடியாது தேரர்களுடனா சந்திப்பில் ஜனாதிபதி அனுர தனது நிலைப்பாட்டை திட்டவட்டமாக தெரிவித்திருக்கின்றார்.!
7.மக்கள் பணத்தை கொள்ளையடித்து சிறையில் இருப்பவர்களை சிலர் நெல்சன் மண்டேலா வாக்க முயற்சி செய்கின்றார். இதனை குடி மககள் நகைச்சுவையாகத்தான் பார்க்கின்றார்கள்.!



