180 பேரை காப்பாற்றிய பிளம்பர்!

துபாய் –இஸ்ரேல் விமானம் தரையிறங்கியது எப்படி? கைக்கொடுத்த ‘டிவி ஷோ’

I put flight attacker in a chokehold, pulled up the controls and stopped  the plane diving', says brave passenger - The Jewish Chronicle

துபாயில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் நகருக்கு சென்ற விமானத்தில் ஓமன் பைலட் திடீரென்று இந்திய பைலட்டை கத்தியால் குத்தி விமானத்தை கடத்தி விபத்தில் சிக்க வைக்க நினைத்தார். இந்த சமயத்தில் இஸ்ரேல் பயணிகள் துணிச்சலாக செயல்பட்டு கத்தியால் குத்திய விமானியை சிறைபிடித்து விமானத்தின் கட்டுப்பாட்டை கைப்பற்றியதோடு, விமானத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர்.

இந்த சமயத்தில் விமானத்தின் கட்டுப்பாட்டை தன்வசப்படுத்த தான் பார்த்த ‘டிவி ஷோ’ தான் உதவியதாக பிளம்பரான இஸ்ரேல் பயணி கூறியுள்ளார். துபாயில் இருந்து நேற்று இஸ்ரேல் நாட்டின் டெல்அவிவ் நகருக்கு ஃப்ளைதுபாய் FZ1073 என்ற விமானம் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

இந்த விமானத்தை இந்தியாவை சேர்ந்த கேப்டன் ஸ்மித் மச்சார் மற்றும் ஓமன் நாட்டை சேர்ந்த பைலட் ஆகியோர் ஓட்டினர். இந்த விமானத்தில் மொத்தம்180 பேர் பயணித்தனர். இதில 27 பேர் குழந்தைகள். 6 பேர் விமான பணியாளர்கள் ஆவார்கள். இந்த விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது ஓமன் நாட்டை சேர்ந்த பைலட், இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்தினார்.

அதன்பிறகு விமானத்தை கடத்தி தரையில் மோதி வெடிக்க செய்ய முயலும் செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. காக்பிட்டில் ஓமன் பைலட் மற்றும் இந்திய பைலட் இடையே நடந்த சண்டையில் விமானம் குலுங்கியது. இதனால் பயணிகள் காக்பிட் அறைக்குள் நுழைந்தனர்.

அப்போது கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்த ஸ்மித் மச்சாரை மீட்டதோடு, ஓமன் பைலட்டை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பிறகு விமானம் சவுதி அரேபியாவின் தாபுக் விமான நிலையத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. விமானத்தில் பயணிகளாக பயணித்த 2 விமானிகள் விமானத்தின் இயக்கி தரையிறக்கினர்.

இந்திய விமானி ஸ்மித் மச்சார்க்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓமன் நாட்டு பைலட்டிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தின் பின்னணி பற்றி தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் பிளம்பர் மற்றும் ‘டிவி ஷோ’வால் தான் இந்த விமானம் வெற்றிக்கரமாக தரையிறக்கப்பட்டது தொடர்பான முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. துபாய் நிபுணர் பகிர்ந்த தகவல்கள் இஸ்ரேலில் விமானம் தரையிறங்கியபோது விமானத்தை வெற்றிகரமாக தரையிறங்க உதவிய பயணிகள் அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சந்தித்தார்.

அதில் முக்கியமானவர் யனிவ் ஹாயூன். பிளம்பர் பணி செய்து வருகிறார். ரத்தக்கறை படிந்த டீசர்ட் உடன் அவர் நெதன்யாகுவை சந்தித்தார். இவர் தான் காக்பிட்டை திறந்து கத்தியால் குத்தப்பட்ட விமானி ஸ்மித் மச்சாரை மீட்டு, துணை விமானியான ஓமன் பைலட்டை வெளியே இழுத்து வந்தவர்.

யனிவ் ஹாயூனை பார்த்ததும் நெதன்யாகு கட்டியணைத்து, ”இதுதான் உண்மையான கவுரவம். நீங்கள் தான் ஹீரோ” என்று கூறினார். அதன்பிறகு யனிவ் ஹாயூன் நடந்த சம்பவத்தை விவரித்தார். ”விமானத்தில் திடீரென்று விளக்குகள் அணைந்தன. விமானம் குலுங்கியது.

இதனால் சந்தேகம் வந்தது. ஏதோ அசம்பாவிதம் நடப்பதாக உணர்ந்தோம். நானும் இன்னொரு பயணியும் காக்பிட் கதவை திறக்க முயன்றோம். ஆனால் முடியவில்லை.  இந்திய கேப்டன் ஸ்மித் மச்சார் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில காக்பிட் கதவின் அருகே சரிந்து விழுந்து கிடந்தார். அவர் சுயநினைவை இழப்பதற்கு முன்பு காக்பிட் கதவை திறந்தார்.

இதனால் தான் நாங்கள் காக்பிட்டிற்குள் செல்ல முடிந்தது. அப்போது ஸ்மித் மச்சாரு தரையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். மற்றொரு விமானி விமானத்தின் கட்டுப்பாட்டுகளை இயக்கி கொண்டிருந்தார். அவரது கழுத்தை பிடித்து பின்னோக்கி இழுத்து காக்பிட்டில் இருந்து வெளியே கொண்டு வந்தோம். பிறகு விமானம் குலுங்காமல் சமநிலையில் செய்ய கட்டுப்பாட்டு கருவிகளை பின்னோக்கி பிடித்து இழுத்தேன்” என்றார்.

இந்த சமயத்தில் பெஞ்சமின் நெதன்யாகு, ”உண்மையில் நீங்கள் தான் கட்டுப்பாட்டு கருவிகளை இழுத்தீர்களா?” என்று சிரித்தபடி கேட்டார். அதற்கு அவர், ”ஆம் நான் தான் பின்னோக்கி இழுத்தேன். ஏனென்றால் நான் ‘ஏர் கிராஷ் இன்வெஸ்டிகேஷன்’ பார்ப்பேன்” என்றார்.

இந்த சமயத்தில் துணை விமானி என்ன செய்தார்? என்று நெதன்யாகு கேட்ட கேள்விக்கு, ”விமானத்தின் கட்டுப்பாட்டை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் எடுக்கவோ, அல்லது ஏதாவது சேதத்தை ஏற்படுத்த முயன்று இருக்கலாம்” என்றார்.

யனிவ் ஹாயூன் விமானத்தின் கட்டுப்பாட்டை கைப்பற்றிய பிறகு விமானத்தில் பயணித்த பணி முடித்த 2 பைலட்டுகள் விமானத்தை இயக்கி வெற்றிகரமாக தரையிறக்கினார். யனிவ் ஹாயூன் கூறிய ‘ஏர் கிராஷ் இன்ஸ்வெஸ்டிகேஷன்’ என்பது ஒரு டிவி நிகழ்ச்சியாகும்.

இது விமான விபத்து தொடர்பான புலனாய்வு விசாரணை அம்சங்களை எடுத்து கூறும் நிகழ்வாகும். விமான விபத்துகள், விமான விபத்துகள் நூலிழையில் விமானங்கள் விபத்தில் இருந்து தப்பியது எப்படி? என்பது தொடர்பான விவரங்களை வழங்கும் நிகழ்ச்சியாகும்.

விமானத்தின் காக்பிட் மற்றும் கேபினுக்குள் என்ன நடந்தது? என்பதை நடிகர், நடிகைகளை கொண்டு தத்ரூபமாக படம்பிடித்து இந்த நிகழ்ச்சி காட்டும். கருப்பு பெட்டியில் கடைசி நேரத்தில் பதிவான குரல் பதிவுகள் அடிப்படையில் வசனங்கள் இடம்பெறும்.

இந்த நிகழ்ச்சியை பார்க்கும் வழக்கத்தை கொண்டவர் யனிவ் ஹாயூன். இதன்மூலம் விமானம் மேலும், கீழுமாக பறக்கும்போது சமநிலைக்கு கொண்டு வருவது எப்படி? என்பது பற்றி அறிந்து வைத்திருந்தார். அதனடிப்படையில் தான் யனிவ் ஹாயூன் இந்த விமானத்தின் கட்டுப்பாட்டு கருவிகளை பின்னோக்கி இழுத்ததாக தெரிவித்துள்ளார்.

Previous Story

ரத்த வெள்ளத்தில் இந்திய பைலட் சொன்ன வார்த்தை.. டாக்டர் உருக்கம்

Next Story

Maitreyi Ramakrishnan Issue & Anojan Sivrasa Issue | Paari Saalan and Varun Tamil podcast