குரல் தரும் குறுஞ்செய்திகள்

நஜீப்    

நன்றி: 27.09.2026 ஞாயிறு தினக்குரல் 

1.சுரேஸ் சலே அசாதாரணமான முறையில் வைத்தியசாலையில் சுகபோகம் அனுபவிப்பதாக குற்றச்சாட்டு. இதுவரை ஐந்து மில்லியன் வரை மக்கள் பணத்தில் வைத்தியமாம்.!

2.நாட்டில் இரண்டாவது பெரிய அரசியல் தலைவர் சஜித். ஆனால் அவரது ஆலோசகர்கள் மனிதனை கோமாளியாக்கி வருகிறார்கள்.அனோஜன் பதிவு இதற்கு நல்ல உதாரணம்.!

3.ஈஸ்டர் சூத்திரதாரிகள் என்று இன்று நாடும் குடிகளும் யாரை விரல் நீட்டுகின்றார்களோ அதே ஆட்கள் தான் தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்கின் குற்றவாளிகளை ஆஜர்படுத்தி இருந்தனர்.!

4.ஈஸ்டர் தாக்குதலில் தண்டனை பெற்ற அனைவருமே முஸ்லிம்கள். ஆனால் இது குறித்த சமூகம் கவலை கொள்ளவில்லை. தாக்குதலை அந்த சமூகம் நிராகரிப்பது உறுதியாகிறது.!

Sri Lanka attacks: The family networks behind the bombings

5.தீர்ப்பு வந்த போது பலர் தேசிய பட்டியல் இப்ராஹிமை தேடினார்கள். கோட்டா ஜனாதிபதியாக இருந்த நாட்களிலே மனிதன் வெளியே வந்துவிட்டார்.ஆனாலும் வழக்கு இருக்கின்றது.!

6.இருபத்தி இரண்டாவது திருத்தம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வரும் போது சில எதிரணி உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாகவும் பலர் எஸ்கெப்பாகி உதவுவார்களாம்!

7.நீதிமன்ற ஆய்வாளர் பசீரிடம் ஈஸ்டர் தாக்குதல் வழக்குகள் முடிந்து விட்டது அடுத்த கட்டம் பற்றி ஊடக சந்திப்பில் அவரைக்கேட்க இல்லை, இப்போதுதான் ஆரம்பம் என்கின்றார்.!

 

Previous Story

துப்பாக்கி சூட்டில் 27 பேர் பலி

Next Story

Iran-ல இந்த ஊருக்குள்ள ஒரு மனுஷனையும் காணோம்