நஜீப்
நன்றி: 27.09.2026 ஞாயிறு தினக்குரல்
அரசியல் அமைப்பின் இருபத்தி இரண்டாவது (22) திருத்தம் தொடர்பாக அரசு கொண்டுவந்த தீர்மானத்துக்கு மாற்றமாக எதிரணியினர் நீதிமன்றம் சென்று தமது ஆட்சேபனைகளைத் தெரிவித்தனர்.
அது தொடர்பான விசாரணைகள் முற்றுப் பெற்று தீர்ப்பு சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பு அரசுக்கு சாதகமாக இருந்தது. தீர்ப்பு தேர்தலில் மக்கள் கொடுத்த ஆணைக்கு இசைவாகவும் அமைந்தது.

வேடிக்கை என்னவென்றால் தீர்ப்பு தமக்குச் சாதகமாக அமையும் என்ற நம்பிக்கையில் சில அரசியல் செயல்பாட்டாளர்களும் கட்சிகளும் நம்பி நாட்டிலுள்ள முக்கிய நகரங்களில் தீர்ப்பு அறிவிப்படுகின்ற போது ஆதரவாலர்களை பட்டாசு கொழுத்துவதற்கு தயாராக இருக்குமாறு கேட்டிருந்தனர்.
அந்தத் தகவலை நாம் சில வாரங்களுக்கு முன்னர் சொல்லி இருந்தோம். நம்பிக்கையில் இடிவிழ அவர்களது பட்டாசு கதையும் பட்டுப் போய் விட்டது.




