குரல் தரும் குறுஞ்செய்திகள்

நஜீப்  

 நன்றி: 20.09.2026 ஞாயிறு தினக்குரல் 

1.ஞானசார மன்னிப்பு செல்லாதென நீதி கூறினாலும் ஆள் கைதாகவில்லை. சிறை அதிகாரிகள் அது பொலிஸ் பணி என்கிறது. பொலிசோ கைதுக் கட்டளை வரவில்லை என்கிறது.!

2.நாமல் விவகாரத்தில் தனது கட்சியினர் வரம்பு மீறி ஒத்துழைப்பதை தவிர்க்குமாறு சில கட்சி செயல்பாட்டாளர்களுக்கு தலைவர் சஜித் கடும் எச்சரிக்கை விடுத்தாராம்.!

3.சுரேஸ் சலே வைத்திய அறிக்கையை கொழும்பு தேசிய வைத்திசாலை இதுவரை சமர்ப்பிக்காதது தொடர்பாக நாளை (21.09.2026) விளக்கமளிக்க நீதிமன்றம் கட்டளை.

4.முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மாகாணசபைப் தேர்தல் தாமதமாவது தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு தனது கடும் விமர்சனத்தை வெளியிட்டிருக்கின்றார்.!.

5.சிரந்தி சிரிலிய பண மோசடி விசாரணையை தவிர்த்து சிங்கப்பூர் பறந்தார்.! ஆள்அடையாள இலக்கங்கள் 222222222V (சிரந்தி) மற்றது 111111111V (சிரந்தி உதவியாளர்)

6.இதய மாற்று சத்திர சிகிச்சை செய்த நோயாளியை கூட 2-3 வாரம்தான் வைத்தியசாலையில் வைப்பார்கள். சலேக்கு மட்டும் 100 நாள் கடந்தும் விஷேட சலுகையா எனக்கேள்வி.!

7.சட்டவிரோத அரசியல் படுகொலைப் பிரிவின் தலைமை அலுவலகம் கிரித்தலை படைமுகாமில் மூன்றாவது உளவு பரிவு என்ற பெயரில் செயல்பட்டதாக நீதிமன்றில் திலிப பீரிஸ் தகவல்.!

Previous Story

ஆபிரகாம் லிங்கன் உண்மை கதை

Next Story

ශිරන්ති එක්ක, ශිරන්තිගේ තනියට ගිය කෙනා...?සිංගප්පූරු ගමනේ රහස් හෙළිවෙයි..!