240 பயணிகளுடன் சென்ற இந்தோனேஷியா கப்பல் திடீர் மாயம்.

இந்தோனேஷியாவில் 240 பயணிகளுடன் பயணித்த கப்பல் திடீரென்று மாயமாகி உள்ளது. இதனால் கப்பலில் பயணித்த 240 பேரின் கதி என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தேனேஷியாவில் கிழக்கு ஜாவா என்ற மகாணம் உள்ளது.

இங்கு சுரபயா என்ற நகர் அமைந்துள்ளது. இந்தோனேஷியாவின் 2வது பெரிய சிட்டியாக சுரபயா உள்ளது. இந்நிலையில் தான் சுரபயா நகரில் இருந்து ‘விர்கோ டிரான்ஸ்போர்ட் 8’ கப்பல் 240 பயணிகளுடன் புறப்பட்டது.

இந்த கப்பல் தெற்கு கலிமந்தன் மாகாணத்தின் தலைநகராக பன்ஜார்மாஷின் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஜாவா கடலில் கப்பல் பயணித்து கொண்டிருந்தது. பன்ஜார்மாஷின் நகரில் இருந்து 148 கிலோமீட்டர் தொலைவில் கப்பல் சென்றபோது திடீரென்று தொடர்பை இழந்தது.

இதனால் கப்பல் மிஸ்ஸானதாக அறிவிக்கப்பட்டது. இதுபற்றி உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்பு படையினர் விரைந்து சென்று கப்பலை தேடும் பணியை தொடங்கி உள்ளனர். கப்பல் எங்கு உள்ளது?

கப்பலில் பயணித்த 240 பேரின் கதி என்ன ? என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் இந்தோனேஷியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கப்பல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்? கப்பலில் பயணித்தவர்களின் உயிர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டு இருக்க கூடாது என்று பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இதனால் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து பயணித்து கட்டுப்பாட்டு அறையின் கட்டுப்பாட்டை இழந்தது தெரியவந்துள்ளது. இன்று காலை 10.30 மணி நிலவரப்படி மொத்தம் 103 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

மீட்பு குழுவினர் தனித்தனியாக பிரிந்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தோனேஷியாவை எடுத்து கொண்டால் அங்கு 17 ஆயிரம் தீவுகள் உள்ளன. இங்கு பொதுமக்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்வதற்கு Ferry வகையை சேர்ந்த கப்பல்களை பயன்படுத்தி வருகின்றனர்.

விமானங்களை விட கப்பல் பயணம் எளிது என்பதால் ஏராளமானவர்கள் இதனை தேர்வு செய்து பயணித்து வரும் நிலையில் இப்போது ஒரு கப்பல் கடலில் திடீரென்று மாயமாகி உள்ளது.

Previous Story

12,000ක් බිලිගත් ලෝකයේ ශාපලත්ම දුම්රිය මාර්ගයේ කතාව