நஜீப்
நன்றி: 13.09.2026 ஞாயிறு தினக்குரல்
ரணில் தனது ஐதேக.வின் 80வது வருடாந்த மாநாட்டை கடந்த வாரம் நடாத்தினார். இந்த வாரம் ஹக்கீம் தனது கட்சி மா நாட்டையும் ஸ்தாபகத் தலைவர் அஷ;ரஃப் 26வது நினைவு கூட்டத்தையும் காத்தான்குடியில் 16.09.2026ல் நடாத்துகின்றார்.
ஒரு சமயம் ரணில் ஞானி மற்றுமொருமுறை பெரிய முட்டாள் என்றெல்லாம் ஹக்கீம் பேசி இருந்தாலும், இந்த இரு மனிதர்களின் அரசியல் செயல்பாடுகள் மற்றும் கட்சிகளின் யாப்புக்கள் பதவியில் இருக்கின்ற தலைமைகளின் நலன்காக்கும் விதமாகவே வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
அரசியல் உயர் பீடம் மத்திய குழு அனைத்திலும் தலைவர்களின் கையாட்கள்-விசிரிகளால் நிரப்பப்பட்டிருக்கும். கலாநிதிக்கு இந்த முறை மு.கா.தவிசாளர் பதவி என்று பேச்சு.! ஹரிசை மீண்டும் உள்வாங்கினாலும் அவருக்கு நன்னடத்தை காலம் என்று ஒரு கட்டுப்பாடாம்.?
கிழக்கு முதல்வர் பதவிக்கும் அதாவுடன் டீலாம். கிழக்குப் பிரதேசவாதம் மு.கா.தலைமைக்கு எஃகு கவசமாக தொடர்ந்து நிற்கின்றது.




