அரசும் சங்கமும் கடும்சமர்!

நஜீப்

நன்றி:23.08.2026 ஞாயிறு தினக்குரல்

கடந்த வியாழக்கிழமை எதிர்க் கட்சித் தலைவர் சஜித்துக்கு சட்டத்தரணிகள் சங்க தலைவர் ரஜிவ அமரசூரிய அனுப்பி வைத்திருந்த கடிதம் அவர்களுக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் இடையே இருக்கின்ற நெருக்கத்தைக் காட்சிப்படுத்தி இருந்தது.

இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு அமைப்பு உத்தியோகபூர்வமாக இப்படி ஒரு கடிதத்தை அனுப்பி கடும் வார்த்தையில் அரசாங்கம் நம்மை அச்சுறுத்தி வருகின்றது என்று பதவியில் இருக்கும் போது திட்டி இருப்பது நாம் அறிந்த வரையில் இது முதல் முறையாக இருக்கும்.

எனவே சட்டத்தரணிகள் அரசுடன் சமாதானம் கிடையாது தொடர்ந்து போர்தான் என்று ட்ரம்ப் பாணியில் சொல்லி இருக்கின்றார்கள். இதற்கிடையில் சட்டத்தரணிகள் வயது விவகாரம் உயர் நீதி மன்றத்தில் இருப்பதும் தெரிந்ததே.

எனவே வருகின்ற நாட்களில் இது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் இன்னும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்க முடியும்.

Previous Story

පල්ලේගමගේ වරකපොළ හො#ර අ#ඹුව ගැන ඇයගේම නංගි සියල්ල හෙළි කරයි |!දුරකථනයෙන් ලිං#ගික සෙල්ලම් කරනවා

Next Story

නාමල් ඔය රැස්වීම්වලට එනවයි කියන සෙනග ටික පුළුවන් නම් අපට පෙන්නපන්!