அமைச்சருக்கு சாகர சவால்!

நஜீப்

நன்றி:16.08.2026 ஞாயிறு தினக்குரல்

தான் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக விடுத்த கொலை அச்சுறுத்தல் தொடர்பாக அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் பேசிய அதே வார்த்தைகளை வெளியில் வந்து பேசுமாறு சாகர சவால் விடுத்தார்.

அமைச்சர் பாராளுமன்ற வரப்பிரசாதங்களுக்கு மறைந்துதான் இப்படிப் பேசி வருகின்றார் என்று ஒரு ஊடகச் சந்திப்பில் சவால் விடுத்தார். அதே சந்திப்பில் அனுரஊழல்கள் பற்றி கெப் வண்டி நிறைய கோவைகளை எடுத்து வந்து காட்சிப் படுத்தினார்.

ஆனால் இவர்கள் போட்ட ஒரு வழக்கை எனக்குச் சொல்லுங்கள் என்று சாகரநிகழச்சி ஏற்பாட்டாளரிடம் சவால் விடுக்க, தயாரிப்பாளர் ஒரு பட்டியலையே அங்கு வாசிக்க மொட்டு-சாகர திக்குமுக்காடினார். வருகின்ற நாட்களில் இது பற்றிய சிங்கள சமூக ஊடகங்கள் கிழித்து  வாங்கும் என்று நாம் முன்கூட்டியே சொல்லி வைக்கின்றோம்.

எல்லாம் ரணில் போட்ட வழக்குகளின் தீர்ப்புகள்தான் வந்து கொண்டிருக்கின்றன என்பது சாகல வாதம்.

Previous Story

இந்தியப் புலி

Next Story

ரஷ்யாவின் அமேசான் கிடங்கு காலி