பீடாதிபதிகள் அரசு முறுகல்?

நஜீப்

நன்றி:16.08.2026 ஞாயிறு தினக்குரல்

எதிரணியினர், ஜனாதிபதி-பீடாதிபதிகளுக்கு இடையிலான ஒரு முரண்பாட்டை தோற்றுவிக்க கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டு வந்தனர். இந்த விடயத்தில் அவர்கள் அதில் வெற்றி பெற்றிருக்கின்றனரோ என்று நமக்கு இப்போது எண்ணத் தோன்றுகின்றது.!

பீடாதிபதிகள் ஜனாதிபதிக்கு அனுப்பியதாக சொல்லப்பட்ட,நீதிபதிகளின் சேவைக்காலத்தை நீடிப்பது தொடர்பான கடிதம் இதுவரை மர்மமாக இருந்தது.

அந்தக் கடிதம் பிணைமுறி விவகாரத்தில் தவறுகள் ஏதுமே நடக்கவில்லை என்று புத்தகம் போட்ட ஐமச. நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேமசிங்ஹ அம்பலப்படுத்தி இருக்கின்றார்.!

அந்தக் கடிதத்தில் இருக்கின்ற வார்த்தைகள் முற்றிலும் எதிரணி மாற்றும் சட்டதரணிகளின் எதிர்பார்ப்புக்களுக்கு விருப்பங்களுக்குமான ஒப்புதல் அல்லது அங்கிகாரம் வழங்குவதாக அமைந்திருக்கின்றது.

ஆனால் ஜனாதிபதிக்கும் பீடாதிபதிகளுக்குமான இந்தக் கடிதம் எப்படி எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ கைகளுக்குப் போனது என்பது அரசியல் வட்டாரங்களில் கேள்வி எழுப்பப்படுகின்றது.

Previous Story

ஈரானின் அடிமடியில் கை வைக்க டிரம்ப் திட்டம்!

Next Story

දූෂණය කර ගැබ්ගත් පසු මරා දාලා! ගන්සයිට් බිත්ති රහස් වමාරයි! ඝාතන වැලක් එළියට