குரல் தரும் குறுஞ்செய்திகள்

நஜீப்

நன்றி:09.08.2026 ஞாயிறு தினக்குரல்

1.ஜேவிபி.1970 தேர்தலில் ஸ்ரீமாவுக்கு  ஆதரவு கொடுக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மை வந்தது. பின்னர் அவர்கள் ஜேவிபி.யை கறிவேபில்லையாக பாவிக்க மோதல் வந்ததாம்.!

2.நாட்டில் தேர்தல் வரைபடத்தை இருபது வருடங்களுக்கு மடித்து வைக்க வேண்டும். ரணிலின் மாமனார் ஜேஆர். நிதி அமைச்சராக இருந்த நாட்களில் பேசிய வார்த்தைகள் இது.

3.மொட்டுச் செயலாளர் தற்போதய பொலிஸ் அதிபர் தெருவில் அடித்துக் கொல்லப்படுவார் என பகிரங்கமாக  பேசியது, கிளிப்பிள்ளை வேலை. அது மேலிட ஓடரில் நடந்ததாம்.!

4.உங்களுக்கு எங்களைப் பற்றித் தெரியும் தானே, நாங்கள் ஒரு போதும் பின் கதவால் ஓடும் ஆட்கள் கிடையாது. அப்போ ஜனாதிபதி கோட்டா முன் கதவாலா தப்பி ஓடினார்?

5.நீதிபதிகள் வயதை நீடிக்கும் விடயத்தில் அரசு உறுதியாக இருக்கின்றது. இதற்கு சர்வசன வாக்கெடுப்பு என்ற நிலை வந்தால் எதிரணியினர் பல்டியடித்து ஆதரிக்கும் ஒரு நிலை!

6.பொலிஸ் பக்கச் சார்பாக செயலாற்றி வருகின்றது. நீதி மன்றங்களும் அப்படித்தான் செய்து கொண்டிருக்கின்றது என குற்றவாளிகள் தற்போது தீர்ப்பு சொல்வது என்ன நியதி!

7.ஜேவிபி. ஆரம்ப செயலாளர் லயனல் போப்பகே அவுஸ்திரேலியாவிலிருந்து வந்திருக்கின்றார். உயிராபத்தில் தென் கொரியா போனவர் அங்கு சமயலறையில் வேலை பார்த்தாராம்!

 

Previous Story

අකිලට පස්සේ තලතා සහ වජිර පොලිමේ ඇතුළට...!

Next Story

. ஷேக் ஹசீனா பிரஸ்மீட்டில் பங்கேற்றதால் ஷகிப் அல் ஹசன் வீட்டில் குண்டு வீச்சு.