அரசு புலிவாலை பிடித்ததா?

நஜீப்

நன்றி:02.08.2026 ஞாயிறு தினக்குரல் 

இன்று நாட்டில் வைரலாகி வருகின்ற முக்கிய செய்திதான் சட்டத்தரணிகளுக்கும் அரசுக்குமிடையிலான நீதிபதிகள் வயது நீடிப்புத் தொடர்பான கயிறிழுப்பு. நாட்டில்  சட்டத்தரணிகள் 28000 வரையில்.

சட்டத்தரணிகள் கூட்டத்துக்கு3500 பேர்வந்ததாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றார்கள். ஆனால் மண்டபத்தில் 350 ஆசனங்களே இருந்ததாக விமர்சனம். சரிவரவு 1000 பேர் என்று வைத்துக் கொள்வோம்.

அரசு ஆதரவாலர்கள் இவர்களுக்கு பெரும்பான்மை கிடையாது என்கிறார்கள். அப்படியானல் ஆளும் தரப்பு தமக்குப் பெரும்பான்மை என வாதிடுவதாக இருந்தால் அங்கு தமது ஆதரவாலர்கள்2000 பேரை அனுப்பி தீர்மானத்தை மாற்றி இருக்கலாமே என்றும் வாதிட முடியும்.

இதில் முரண்பாடுகள் இருப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.வயது விவகாரத்தில் அரசு புலிவாலில் தொங்கி விட்டதோ தெரியாது. நமக்கு வரும் தகவல்படி அக்தோபரில் யாப்புத்திருத்தம் கொண்டு வந்து அரசு சாதிக்க இருப்பதாகவும் கதை.

Previous Story

நெருப்பு போர் சீனாவிலிருந்து ஈரானுக்குள் இறங்கும் நவீன ஆயுதங்கள்

Next Story

புதிய போர் முறை... ஈரானின் டெக்னிக் என்ன?