நஜீப்
நன்றி:26.07.2026 ஞாயிறு தினக்குரல்
நாம் அறிந்த சந்தன காரியவாசத்துக்கு அமைச்சர் ஜீஎல்.பீரிசிடம் ஒரு பேட்டி எடுக்க வருமாறு அவசர அழைப்பு. அப்போது காரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர். சிராணி பண்டாரநாயக்க பதவியிலிருந்து தூக்கப்பட்டது பேசுபொருளாக இருந்த நாட்கள்.
நான் சில நிமிடங்களில் எயார்ப்போர்டில் நிற்கனும். கேள்விகளை விரைவாக கேளுங்கள்- பேராசிரியர். காரி முதல் கேள்வியை எழுப்பினார். இது பொருத்தமில்லாத கேள்வி. நிராகரித்தார் ஜீஎல்.! இரண்டாவது கேள்விக்கும் பதில் தர முடியாது.!
எனது கேள்விகளுக்கு நானே பதில் கூறுகின்றேன். அதனைப் பத்திரிகையில் போடுங்கள்.! முடிவில் காரியவாசம் சேர். நீங்கள் எதனை சொல்ல விரும்புகின்றீர்களோ அதற்கு முரணாக அல்லவா உங்கள் கருத்துக்கள் இருக்கின்றன.! அப்படியா? ரெகோர்டிங்கை திருப்பிப் போடுங்கள் பார்க்கலாம்.!
ஆம் உண்மைதான். நல்;ல வேலை சுட்டிக்காட்டினீர்கள். சரி நான் சொல்ல வேண்டியதை நீங்களே எழுதிப் போடுங்கள். கூறிவிட்டு ஜீஎல். பறந்து விட்டார். இது தான் ஜீஎல்.




