நஜீப்
நன்றி: 28.06.2026 ஞாயிறு தினக்குரல்
சில தினங்களுக்கு முன்னர் ரணிலின் தலையையும் சஜித்தின் உடலையும் பொருத்துகின்ற ஒரு சத்திர சிகிச்சை பற்றி அவரது கட்சி முக்கியஸ்தரான நவின் திசாநாயக்க பேசி இருந்தார்.
இது பற்றி செயலாளர் தலதாவிடம் கேட்டால் அது பற்றி தானக்கு ஏதும் தெரியாது என்று அவர் எஸ்கெப்பாகி இருந்தார். அண்மையில் ஐதேக. கூட்டம் நடைபெற்றபோது இதற்கு கடுப்புடன் நவினுக்கு ரணில் பதில் கொடுத்திருந்தார்.
தனக்கு சத்திர சிகிச்சை செய்ய எவரும் சிரமப்பட வேண்டாம். எனது தலையைப்போலவே உடம்பும் வலுவாகத்தான் இருக்கின்றது என்று நவீன் முகத்திற்கே ரணில் கூறி இருந்தார்.
அது போல மற்றுமொரு ஐதேக. முக்கியஸ்தர் சிரால் லக்திலக்க ஒரு ஊடகச் சந்திப்பில் 2029லும் அனுராதான் ஜனாதிபதி அவருக்கு தேர்தலில் ஒரு போட்டியாளர் இருக்கின்றார் என்று நான் கருதவில்லை என்று பகிரங்கமாக கூறி இருக்கின்றார்.
இதனால் ஐதேக-ரணில் ஐமச-சஜித் இணைவு கதை கானல் போல ஒன்றுதான்.




