ஈரானுக்கு பணமழை.. அடுத்த குட்நியூஸ்!

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஈரான் தனது 12 பில்லியன் டாலர் மதிப்பிலான முடக்கப்பட்ட சொத்துக்களை உடனடியாக விடுவிக்க அமெரிக்காவுடன் உடன்பாடு எட்டியுள்ளது. இந்த நிதி விரைவில் கிடைக்கும் என்று ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தின் ஈரானின் தலைமை பேச்சுவார்த்தையாளரான கலிபாஃப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகல் முடக்கப்பட்ட 12 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை உடனடியாக விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காரிபாபாதி, இந்த உடன்பாட்டை செயல்படுத்தும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிதி ஈரானின் எண்ணெய் விற்பனை மற்றும் பிற வணிக நடவடிக்கைகளில் இருந்து முடக்கப்பட்ட சொத்துக்களாகும்.

இவை பல ஆண்டுகளாக அமெரிக்க தடை காரணமாக பயன்படுத்த முடியாமல் இருந்தன. தற்போது ஜெனிவா கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்பட்டு உள்ள காரணத்தால் இத்தொகை விரைவில் ஈரான் அரசின் கையில் வந்து சேரும்.

அமெரிக்காவின் கோரிக்கையை ஈரான் ஏற்கவில்லை ஈரான், இந்த விடுவிக்கப்பட்ட நிதியை அமெரிக்க விவசாய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

ஈரானுக்கு அமெரிக்க விவசாய பொருட்களை வாங்கும் கடமை இல்லை என்றும், இந்த நிதியை எப்படி பயன்படுத்துவது என்பதில் ஈரானுக்கு முழு உரிமை உள்ளது என்றும் அந்நாடு தெரிவித்துள்ளது. அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், “ஈரானுக்கு எந்த பணமும் விடுவிக்கப்படவில்லை” என்று கூறியிருந்தார்.

ஆனால் ஈரானின் இந்த அறிவிப்பு, அவரது கருத்துக்க முற்றிலும் முரணாக உள்ளது. இதேபோல டிரம்ப் பேசும், பதிவிடும் தகவல்களுக்கு மாறாகவே அனைத்தும் நடக்கிறது, ஆனால் நடப்பது அனைத்தும் ஈரானுக்கு சாதகமாக உள்ளது.

இது ஏன் முக்கியம்? ஈரானுக்கு 12 பில்லியன் டாலர் நிதி கிடைப்பது, அதன் பொருளாதாரத்துக்கு பெரும் உதவியாக அமையும். இந்த நிதியை எண்ணெய் ஏற்றுமதி, உள்கட்டமைப்பு மற்றும் பிற திட்டங்களுக்கு பயன்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளது.

இந்த உடன்பாடு, சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தையில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த நிதி எப்படி பயன்படுத்தப்படும் என்பதில் இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு தொடர்வதால், எதிர்கால பேச்சுவார்த்தைகள் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த சில நாட்களில் இந்த 12 பில்லியன் டாலர் நிதி உண்மையில் விடுவிக்கப்படுகிறதா இல்லையா என்பது தெரிய வரும். 60 நாள் இதோடு இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈரான் எண்ணெய் விற்பனைக்கும், ஏற்றுமதிக்கும் 60 நாட்கள் தடை விலக்கு கொடுத்துள்ளது.

இந்த சலுகை ஆகஸ்ட் 21, 2026 வரை செல்லுபடியாகும். இதன் மூலம் ஈரான் கச்சா எண்ணெய் உற்பத்தி, விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதன் வாயிலாகவும் பல பில்லியன் டாலர்களை ஈரான் சம்பாதிக்க உள்ளது.

Previous Story

හුස්ම ගන්නත් බය හිතෙන තෙල්දෙණිය ඝාතනයේ ප්‍රධාන සැකකරු සහ බිරිඳ දැමූ වැඩ කිඩ එළියට

Next Story

துபாய் to அபுதாபி வெறும் 1 மணி நேரம்..