லதா மங்கேஷ்கர் உடல் நிலை மோசம்!

மும்பை: பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த, ‛பாலிவுட்’ பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்(92). கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். இவருக்க கடந்த 8 ம் தேதி கோவிட் தொற்று உறுதியானது. தெற்கு மும்பையில் உள்ள ‛பிரீச் கேண்டி’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ‛வென்டிலேட்டர்’ மூலம் சுவாசித்து வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக சில நாட்களுக்கு முன்னர் டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளது. அவர் கவலைக்கிடமாக உள்ளார். வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவர், டாக்டர்களின் கண்காணிப்பில் தொடர்ந்து இருப்பார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

லடாக்கில் இந்திய ராணுவ வீரர்களை தாக்கிய சீன ராணுவ வீரருக்கு குளிர்கால ஒலிம்பிக் ஜோதியை எடுத்து வரும் பொறுப்பு அளிக்கப்பட்டதற்கு, அமெரிக்க எம்.பி.,க்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். லடாக்கில் சீனாவின் அத்துமீறலுக்கு எதிராகவும், இந்தியாவுக்கு ஆதரவாகவும் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.சீனாவின் பீஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில் ஒலிம்பிக் ஜோதியை எடுத்து வரும் கவுரவம், கடந்த 2020ல் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்தினருடன் மோதிய, சீன ராணுவ வீரர் குய் பபாவோக்கு அளிக்கப்பட்டது.
இது குறித்து அமெரிக்க எம்.பி.,க்கள் மார்கோ ருபியோ, ஜிம் ரிஸ்ச் ஆகியோர் கூறியதாவது:

இந்திய ராணுவ வீரர்களை தாக்கியவருக்கு, ஒலிம்பிக் ஜோதியை எடுத்து வரும் கவுரவம் வழங்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. இது மிகப் பெரிய அவமானம். அண்டை நாடான இந்தியாவில் சீனாவின் அத்துமீறலையும், உள்நாட்டில் உய்குர் முஸ்லிம்கள் மீதான அடக்கு முறையையும் வன்மையாக கண்டிக்கிறோம். இந்தியாவின் இறையாண்மைக்கும், உய்குர் மக்களின் சுதந்திரத்திற்கும் அமெரிக்கா என்றென்றும் ஆதரவாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்நிலையில், அமெரிக்க எம்.பி.,க்கள் பலர் இணைந்து, அமெரிக்கா – சீனா கூட்டுப் போர் பயிற்சியை குறைக்கும் மசோதாவை பார்லி.,யில் தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியதாவது:
இந்தியா – சீனா எல்லை பிரச்னையை பேசித் தீர்ப்பதற்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும். சீனா, அண்டை நாடுகளை மிரட்டும் போக்கு குறித்து ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளோம். இந்தோ – பசிபிக் பிராந்திய பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக, நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா என்றென்றும் துணை நிற்கும்.இவ்வாறு கூறினார்.

 

Previous Story

அமெரிக்க சிறுவனுக்கு 100 ஆண்டு சிறை

Next Story

அனைத்து குற்றங்களுக்கும் அருந்திகவே முன்னோடி:உடுவே தம்மாலோக்க தேரர்