காலாவதியாகும் கட்சிகளும் அரசியல் தலைமைகளும்!

நஜீப் பின் கபூர்

நன்றி: 14.06.2026 ஞாயிறு தினக்குரல்

இந்தத் தலைப்பில் கருத்துக்களை சொல்லும்போது உள்நாட்டு அரசியல் பற்றிய நாம் வெளியிடுகின்ற கருத்துக்கள் சற்றுக் கடுமையானவையாக அமையக்கூடும். முடியுமான வரை மென்iமாயாக பேச எதிர்பார்க்கின்றோம். ஆனால் கனதியான வார்த்தைகளில் சொல்லி அரசியல் கட்சிகளில் செயல்பாடுகளில் மாற்றங்கள் வேண்டும் என்பதுதான் எமது எதிர்பார்ப்பு. இன்று உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளில் கட்சி அரசியல் முறைதான் காணப்படுகின்றது. இதில் ஒரு கட்சி இரு கட்சி பல கட்சி முறை என்றும் காணப்படுகின்றன.

உலகில் முதல் அரசியல் கட்சி பற்றிய தேடலில் துல்லியமான பதில்களை எமக்குக் கண்டறிய முடியவில்லை. ஆனால் 1770 ஆம் ஆண்டு எட்மண்ட் புர்க்கே என்பவர் எழுதிய அரசியல் முரண்பாடுகளுக்கான காரணங்கள் என்ற ஒரு கருத்து இதன் ஆரம்பமாக எடுத்துக் கொள்ளலாம். 1816ல் பென்ஞ்சமின் கான்ஸ்டனண்ட் என்பவர் அரசியல் கட்சிகள் பற்றிய வரைவிலக்கணத்தை உருவாக்கினார். பின்னர் பிரான்ஸ் ஐக்கிய இராச்சியம் துருக்கி ஸ்பைன் போன்ற நாடுகளில் அரசியல் அமைப்பு ரீதியான செயல்பாடுகள் துவங்கியதாகவும் தகவல்கள்.

என்றாலும் 1828ல் அதிகாரபூர்வமாக துவக்கப்பட்ட அமெரிக்க ஜனநாயகக் கட்சி மிகப்பழைய அரசியல் கட்சியாகக் கருதப்படுகின்றது. ஆனால் நமக்கு அதில் நம்பகத்தன்மை கிடையாது. காரணம் அமெரிக்க வல்லாதிக்கம் மற்றும் ஊடகங்களில் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு இதற்கு துணை புரிந்திருக்கலாம் என்று நாம் நம்புகின்றோம். பொதுவாக ஒத்த கருத்துடன் இருக்கின்ற மக்களால் அரசியல் ஆதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் தோற்றுவிக்கப்படுகின்ற அமைப்பை அரசியல் கட்சிகள் என்று எடுத்துக் கொள்ள முடியும்.

அது அப்படி இருக்க இன்று உலகில் இருக்கின்ற மிகப் பெரிய அரசியல் கட்சி இந்திய பாரதிய ஜனதா கட்சி. அதில் 182 மில்லியன் அங்கத்தவர்கள்; இருப்பதாக சொல்லப்படுகின்றது. சீன கம்யூனிஸ் கட்சியில் 102 மில்லியன் உறுப்பினர்களும் இந்திய தேசிய காங்கிரசில் 50 மில்லயன் பேரும் அமெரிக்க ஜனநாயகக் கட்சியில் 48 மில்லியன். குடியரசுக் கட்சியில் 37 மில்லியன் பேரும் இருப்பதாக தெரிகின்றது. இதனை ஒரு பெரிய இசுவாக எடுத்துக் கொள்ளத் தேவை இல்லை. காரணம் நாடுகளின் குடித்தொகைக்கு ஏற்ப இது அமைவது இயல்பானதுதான். ஆனால் சீன கம்யூனிஸட்; கட்சியில் இருக்கின்ற அரசியல் செயல்பாடுகள் மிகவும் வலுவானதும் கட்டுப்பாடுகளையும் கொண்டது.

அரசியல் கட்சிகள் தொடர்பில் நமது நாட்டின் வரலாறு என்ன என்பதனை சற்றுப்பார்ப்போம். பொன்னம்பலம் அருணாச்சலம் 1919ல் இலங்கை தேசிய காங்கிரஸ். 1935 இலங்கை சமசமஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி 1943, அகில இலங்கை மலாய் அரசியல் ஒன்றியம் 1944. போன்ற அமைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இது பழைய கட்சிகளுக்கு சில உதாரணம் மட்டுமே. இன்று நாட்டில் 85 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டிருகின்றன. அவற்றின் சமகால செல்வாக்குகள் பற்றிய சில புள்ளிவிபரங்களை நாம் கடந்த வாரம் எழுதிய கட்டுரையில் சொல்லி இருக்கின்றோம்.

இலங்கையில் செயல்படும் அனைத்து அரசியல் கட்சிகளும் பெயரளவில்தான் நகர்கின்றன என்பது நமது குற்றச்சாட்டு. ஒரு சிலர் தமது கையாட்களை வைத்து ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகளை பதிவு செய்திருக்கின்றனர். நமது நாட்டில் அனேகமான அரசியல் கட்சிகள் தலைவர்களின் பிடியில்தான் இருந்து வருகின்றன. அங்கு பெரும்பாலும் தலைவருக்கும் அவர்களின் கையாட்களின் விருப்பு வெறுப்புக்களையும் முன்னிருத்தித்தான் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நமது நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியில் இருக்கின்ற அங்கத்தவர்கள் எண்ணிக்கை தொடர்பாக அறிய முற்பட்டாலும் அவற்றை எந்தப் பதிவுகளிலோ அல்லது காரியாலயங்களிலோ தேடிக்கொள்ள முடியவில்லை. ஆனால் தமது கட்சி பற்றிய பதிவுகளை அவர்கள் தேர்தலை மட்டுமே முன்னிருந்தி பேணி வருகின்றார்கள். அதற்கு மேல் உணர்வுபூர்வமான செயல்பாடுகள் எந்தக் கட்சிகளிலும் கிடையாது.

தலைவர்களை துதிபாடுகின்ற ஒரு அரசியல் செயல்பாடுகளையே நாம் கட்சிகளில் பார்த்து வருகின்றோம். இதன் விளைவுகளையே தேர்தல் முடிவுகளில் அவர்களுக்கு அறுவடை செய்ய முடிந்தது. கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சி வேட்பாளர் கோடாபே ராஜபக்ச 52 சதவீத வாக்குகளையும் இரண்டாம் இடத்துக்கு வந்த சஜித் பிரேமதாச 42சதவீத வாக்குகளையும் மூன்றாம் இடத்துக்கு வந்த அனுர 4 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தனர். அடுத்து 2024 நடை பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் என்பிபி வேட்பாளர் அனுரகுமார 42.31 சதவீதம். சஜித் 32.76 சதவீத மூன்றாம் இடத்துக்க வந்த ரணில் 17.27 சதவீதம். மொட்டுக் கட்சி வெறும் 2.17 வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொண்டது.

LEN - www.lankaenews.com |

நாம் இந்த நாட்டில் செயல்படும் பிரதான கட்சி செயலகங்களுக்கும் போல போய் அங்கு அரசியல் தலைமைகளை சந்தித்திருக்கின்றோம். அதில் மிகவும் நேர்த்தியான செயல்பாடுகளை பெலவத்தை ஜேவிபி காரியாலயத்திலே நாம் பார்த்தோம் என்பதனை மனச்சாட்சிக்கு மாற்றமில்லாது சுட்டிக்காட்ட வேண்டும். மேலும் எமக்கு கொடுக்கப்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் அங்குள்ள கட்சித் தலைமைகள் குறிப்பிட்ட நேரம் தப்பாமல் எம்மை சந்தித்து உரையாடி இருக்கின்றார்கள். இதனை நாம் பலமுறை அந்த நாட்களிலே சொல்லி இருந்தோம். இப்படியான நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப வேறு எந்தக் கட்சியிலும் செயல்பாடுகள் நடப்பதில்லை.

குறுகிய கால இடைவெளியில் மொட்டுக் கட்சியில் இப்படியான ஒரு சரிவு அசாதாரண நிகழ்வு. இந்தக் கட்சிகளின் செயல்பாடுகள் வெறும் மாயாயை. ஒரு கட்டுக்கோப்பை அவர்கள் பாதுகாத்து வராததுதான் வீழ்ச்சிக்கு அடிப்படைக் காரணம். என்பிபிக்கு கிடைத்த வாய்ப்பும்-வெற்றியும் நிலையானதா என்பதிலும் நமக்கும் நிறையவே சந்தேகங்கள் இருக்கின்றன. எதிர்வரும் காலங்களில் தமது ஆதரவை ஆளும் என்பிபி. எந்தளவு தக்கவைத்துக் கொள்ளப் போகின்றது என்பது கேள்விக்குறி. ஆனால் என்னதான் அரசுக்கு எதிரான விமர்சனங்கள் இருந்தாலும் ஆளும் என்பிபி. மிகப் பெரிய வித்தியாசத்தில் இன்றும் முன்னணியில் இருந்து வருகின்றது.

இப்போது நமது நாட்டில் செல்வாக்குடன் இருந்த அரசியல் கட்சிகள்-தலைமைகளுக்கு என்ன நடந்திருக்கின்றது என்பதனைப் பார்ப்போம். சுதந்திரத்துக்குப் பின்னர் அதிகாரத்துக்கு வந்த ஐதேக. தொடர்ச்சியாக அதிகாரத்தில் இருக்க என்.பெரோ கொல்வின் பீட்டர் கெனமன் போன்ற இடதுசாரிகள் ஆளுமைமிக்க நல்ல எதிரணியினராக நாடாளுமன்றில் செயலாற்றி வந்திருக்கின்றனர். அதே நேரம் வடக்குக் கிழக்கில் தமிழர் அரசியல் கட்சிகள் முன்பு செல்வாக்குடன் இருந்தன.

ஐதேக.வுடன் முரண்பட்ட எஸ்.டப்லியு.ஆர்.டி. பண்டாரநாயக்க தோற்றுவித்த ஸ்ரீலசு.கட்சி பிற்காலத்தில் ஐதேக.வுக்கு நல்ல போட்டியாக இருந்தது. அதே போன்று அண்மையில் ராஜபக்சாக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை துவங்கும் வரை ஐதேகவும் சு.கட்சியும் இந்த நாட்டில் ஏறக்குறைய ஏழு தசாப்தங்கள் மாறி மாறி அதிகாரத்தில் இருந்துள்ளன.

2015ல் சு.கட்சி செயலாளராக இருந்த மைத்திரிபால ராஜபக்சாவுக்கு எதிரான வேட்பாளராக அதிரடியாக களமிறங்கியது சு.கட்சி பிளப்பதற்கும் ராஜபக்சாக்களின் பொது பெரமுன பிறப்பெடுப்பதற்கும் அடிப்படையாக அமைந்தது. இனவாத சிந்தனைகளை மையமாக கொண்ட அந்தக் கட்சியால் ஒரு தசாப்பதங்கள் கூட நீடித்து நிலைக்க முடியவில்லை. என்னதான் ஆளுமை மிக்க அரசியல் தலைமையாக இருந்தாலும் இன்று மஹிந்த ராஜபக்ஸ நாமத்தை முன்னிருத்தி துவங்கிய அரசியல் இயக்கம் 2024 ஜனாதிபதித் தேர்தலில் வெறும் 2.27 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

இந்த நாட்டில் இருக்கின்ற ஒட்டு மொத்த சிறுபான்மை சமூகங்களும் ராஜபக்ஸாக்களின் இந்த அரசியல் இயக்கத்தை தீண்டாது தள்ளியே இருந்தது. கொடூரமான ஈஸ்டர் தாக்குதல் நடாத்தி பெரும்பான்மை ஆதரவுடன் ராஜபக்ஸாக்கள் அதிகாரத்தைக் கைப்பறிக் கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டு. அவர்கள் அரசியலை கடவுளால் கூட ஜீரணிக்க முடியவில்லை போலும். அதனால்தான் இன்று அந்த அரசியல் இயக்கம் இந்தளவுக்கு சரிந்தது.

அதே போன்று ரணில் தொடர்ச்சியாக மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஐதேக.வுக்கு தலைமைத்துவம் கொடுத்து வருகின்றார். தொடர் தோல்விகள். கவர்ச்சி இல்லாத அவரது தலைமைத்துவம் காரணமாக கட்சியில் பெரும் சரிவு. இன்று ஒரே ஒரு ஆசனம். அதுகூட அவர்களுக்குச் சொந்தமில்லாத இதொ.காங்கிரசுக்கான உறுப்புரிமை அது. ஜீவன் தொண்டமான்தான் அதன் பிரதிநிதி.

ஆனால் வேடிக்கை என்னவென்றால் மிகச் சிறிய எண்ணிக்கையிலான ஒரு கூட்டமும் கூலிக்கு அமர்த்தப்பட்டிருக்கின்ற ஊடகங்களும் ரணில் மீண்டும் அதிகாரத்துக்கு வருவார் என்று நம்புகின்றார்கள். ஆனால் நாம் ரணிலை காலாவதியான அரசியல்வாதி என தொடர்ந்து முத்திரை குத்தி வருகின்றோம். அதுதான் தமது அரசியல் புரிதல்.

ரணிலின் பிரபுத்துவப் போக்கால் அவருடன் பயணிக்க முடியாது என்பதால் ஏறக்குறைய ரணிலின் ஐதேக.ஆதரவாலர்களுடன் ஐம.சக்தியை அமைத்து இன்று சஜித் அதற்கு தலைமை தாங்குகின்றார். இவரும் ஒரு வாரிசு அரசியல்வாதி. ஆனால் அவர் ஆளுமை மிக்க ஒரு தலைவராக இதுவரை களத்தில் எதனையும் சாதிக்கவில்லை-சாதிக்கவும் வாய்புக்கள் கிடையாது. இது நமது கருத்து மட்டுமல்ல அவரது கட்சியில் இருப்பவர்கள் பலர் கூட இதே நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள். காரணம் சஜித்; கம்மன்பில ஞானசார போன்ற இனவாதிகளுடன் கூட கூட்டணிக்குத் தயாராக இருப்பது இன்று தெரிகின்றது.

அதே போன்று செல்வாக்கு மிக்க அரசியல் கட்சியாகவும் நெடுநாள் அதிகாரத்தில் இருந்த சு.கட்சி இன்று அரங்கில் காணாமல் போய் நிற்கின்றது. மைத்திரி நிமல் சிரிபால தயாசிரி துமிந்த போன்றவர்கள் இதன் பிரதானிகள் என்று சொல்லிக் கொண்டாலும் அவர்களுக்கே நாம் எங்கு இருக்கின்றோம் என்பது தெரியாது. இது திக்குத் தெரியாத காட்டில் சிக்கி நிற்கும் ஒரு வழிப்போக்கன் நிலை என சுட்டிக்காட்ட முடியும்.

தமிழ் தரப்புக்கள்

ஒரு காலத்தில் முன்மாதிரியான அரசியல் இயக்கத்தை நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் வைத்திருந்த தமிழ் சமூகம் இன்று நோயாளியின் நிலையில் இருக்கின்றது. இதனை நாம் கூறவில்லை கட்சிக்குள் இருக்கின்றவர்களே அமர்வுகளில் இதனை பகிரங்கமாக பேசியும் வருகின்றார்கள். சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட தனி நபர்கள் இன்று தமது விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ப கட்சிகiளை முன்னெடுத்து வருகின்றனர்கள். இவர்கள் கொழும்பு அரசியல் ஏஜெண்டுகள் என்பதால் தமிழ் மக்களுக்கு அவர்கள் மீதான நம்பிக்கை கிடையாது. சம்பந்தன் பலயீனங்களால் கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சுமந்திரனே தமிழரசு சரிவுக்கு பிரதான காரணி.

Threats and intimidation have already started: Sumanthiran - Opinion | Daily Mirror

இதனால் தமிழர் அரசியலில் ஒரு குழப்ப நிலை. தமிழர் தரப்பில் விக்ணேஸ்வரன் ஒரு நல்ல தலைமையைக் கொடுப்பார் என்ற எதிபார்ப்பு இருந்தது. ஆனால் மனிதன் இன்று காணாமல் போய் இருக்கின்றார் என்று தெரிகின்றது. எனவே தமிழ் மக்களின் விமோசனத்துக்கு புத்துணர்வு கொடுக்க கிளர்ச்சிகர ஜென்சி இயக்கம் ஒன்று தேவை. வடக்குக் கிழக்கில் இதன் தேவை பிரகாசமாக இருக்கின்றது. இதுபற்றி அங்குள்ள இளசுகளும் புத்திஜீவிகளும் துரிதமாக சிந்திக்க வேண்டும்.

தனித்துவ அரசியல்

முஸ்லிம் மற்றும் மலையக சமூக அரசியல் பற்றி சற்றுப்பபார்ப்போம். ஒரு காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமை கொழும்பை மையப்படுத்தி இருந்தது. அதுவும் ஐதேக.வை திருப்திப்படுத்தும் ஒரு அரசியல்தான் முஸ்லிம் சமூகத்தில் இருந்தது. நல்ல சமூக சிந்தனையும் உணர்வும் மிக்க சு.கட்சி-டாக்டர் பதியுதீன் கரங்களைப் பலப்படுத்த முஸ்லிம் சமூகம் பின்வாங்கியே நின்றது. இந்தப் பின்னணியில் அஷ;ரஃப் துவங்கிய மு.கா. கிழக்கில் சுனாமிபோல புகுந்து முஸ்லிம் சமூகத்தின் கொழும்புத் தலைமைத்துவத்தை தகர்த்தெரிந்தது. இதனால் முஸ்லிம் சமூக அரசியல் கிழக்கை மையம் கொண்டது. அதில் ஒரு யாதார்த்தமும் நியாயம் இருந்தது. கிழக்குக்கு வெளியேயும் மு.கா. தாக்கம் கனிசமாக இருந்தது. அதற்கு அஷ;ரஃப் ஆளுமையும் சிந்தனையும் அடிப்படையாக அமைந்தது.

Daily Mirror - Sri Lanka Latest Breaking News and Headlines - Print Edition Hakeem exchanges pleasantries with Gota

ஆனால் இன்று மு.கா அரசியல் தலைமை கிழக்கிலிருந்து பறிபோய் இருக்கின்றது.? நாம் இப்படிச் சொல்வதற்கு காரணம் தற்போதய மு.கா. தலைமையிடம் சமூகம் அல்லது மண்சார்ந்த எந்த உணர்வுகளும் கிடையாது என்பது நமது தர்க்கம். இதற்கு நிறையவே காரணஙகள். அவை பற்றி இங்கு விரிவாக பேச முடியாது. கிழக்கில் இருக்கின்ற பிரதேசவாதம் ஹக்கீமுக்கு நல்ல பாதுகாப்பாக இருக்கின்றது. ரணில் தலைமை போலதான் முஸ்லிம் சமூகத்தில் மு.கா.தலைமையின் செயல்பாடுகளும் காணப்படுகின்றன. இன்று முகா.வில் எந்த உணர்வுபூர்வமான செயல்பாடுகளும் கிடையாது.

இன்று முஸ்லிம் அரசியலில் ரிசாட் பதியுத்தீன் மு.காவுக்கு மாற்று அணி. ஆனால் அது இன்னும் சமூகமயப்படுத்தப்படவில்லை என்பது நமது குற்றச்சாட்டு. இது தவிர சிற்றரசுகள் போல சிலர் கிக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றார்கள். ஒட்டு மொத்தமாக முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் தெளிவில்லாத அதன் தலைமை காரணமாக கேள்விக்குறியாகி நிற்கின்றது. எனவே தன்னல அரசியல் தலைமைகளுக்கு பதில் கொடுக்க அங்கும் ஒரு ஜென்சி  இயக்கத்துக்கு இடைவெளி இருக்கின்றது.

Jeevan Thondaman to Resign as CWC General Secretary

மலையக அரசியலில் மூடிசூடா மண்ணனாக இருந்த சௌமியமூர்த்தி தொண்டமான் செயல்பாடு இன்று எந்தளவு அந்தக் கட்சியால் முன்னெடுக்கப்படுகின்றது என்பது தெளிவில்லாமல் இருக்கின்றது. அங்கு இருக்கும் வாரிசு ஆதிக்கம் ஆரோக்கியமானதாக நமக்குத் தெரியவில்லை. மலையத்தில் தனித்துவ அரசியல் அமைப்புக்கள் பல இருந்தாலும் களத்தில் அதன் ஆதிக்கம் தேசிய அரசியலில் எந்தளவு பலமாக இருக்கின்றன என்பதும் நமக்குத் தெரியாது. இது அரசுகள் அமைய கொடுக்கின்ற முட்டுக்கள் அல்ல. தமது சமூக ரீதியில் அது வென்றெடுக்கின்ற உரிமைகள் பற்றித்தான் நாம் விமர்சனங்களை செய்கின்றோம். எனெனில் இந்த சமூகத்துக்கு நிறையவே தேவைகள் இருந்து வருவது தெரிந்ததே. என்பிபி. அரசாங்கத்தில் கனிசமான சிறுபான்மை சமூக உறுப்பினர்கள் இருந்தாலும் அவர்களது பிரதிநிதித்துவம் அந்த சமூகங்களின் தேவைகளை எந்தளவு நிவர்த்தி செய்கின்றன என்பது பற்றி தெளிவில்லாத ஒரு நிலையே இருந்து வருகின்றது.

Previous Story

ගෝඨාගෙන් මහ රෑ ෆොන්සේකාට ඇමතුමක් ! හමුදා ප්‍රධානීන් රැසක් අල්ලස් කොමිසමට කැඳවයි!

Next Story

නාවික හමුදාව විහිළුවක් කළ යෝෂිත, එදා දාපු සෙල්ලම්