நஜீப்
நன்றி: 14.06.2026 ஞாயிறு தினக்குரல்
தேர்தல் காலங்களில் ரணில்-சஜித் கூடாரங்களுக்கு புகுந்து கண்டி மாவட்டத்தில் சராசரியாக ஒரு இலட்சம் வரை வாக்குகள் வாங்கி கௌரவமாக வெற்றிவாகை சூடுபவர்தான் தனிதுவத் தலைவர் ஹக்கீம். இந்த முறை வெறும் முப்பதாயிரம் வரை வாக்குகளைப் பெற்று நூலிழையில் கரை சேர்ந்தார்.
ஈஸ்டர் தாக்குதலை ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் தலையில் கட்ட எடுத்த முயற்சிகள் தவறு என்பது நீதி விசாரணைகளில் இன்று உறுதியாகி வரும் நிலையில், செனல்-4 தொடர்பில் நாடாளுமன்றித்தில் பேசிய ஹக்கீம் பிரபா மகன் பலச்சந்திரனை அங்கே இழுத்து கதையை திசைதிருப்பி சலேக்கு வக்காளத்து வாங்கப்போக அதை சரியாக கண்டு கொண்ட ஜகத் மனுவர்ன அந்த இடத்தில் பிடித்து ஹக்கீமை கிழித்துத் தொங்கவிட்டார்.
அப்போது தனித்துவம் வாயடைத்து மௌனித்து நின்றது. இது போன்ற செயல்களால் ஹக்கீமை அரசியல் வேமாக காலாவதியாகி வருகின்றது. மனிதனின் இந்த இரட்டை வேடத்துக்கு கடும் விமர்சனங்கள்.





