குரல் தரும் குறுஞ்செய்திகள்

நஜீப்

நன்றி: 14.06.2026 ஞாயிறு தினக்குரல்

1.ஈஸ்டர் தாக்குதல் மூன்றாவது சந்தேக நபர் சலேக்கு எதிராக 18 சாட்சிகள் தயார். அதில் தரவரிசையில் மௌலான கதை நான்காம் இடத்திலாம்.!

2.இப்போது சஜித் அணி யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி என்ற நிலையில். அண்மையில் ஞானசாரவுடனும் ஒரு கூட்டணியில் அமர்ந்திருந்தனர்.

3.தேர்தலில் சமூகத்தை உசுப்பேற்றி வாக்கு வேட்டைக்கு வருகிற தலைமைகள் ஈஸ்டார் தாக்குதல் விவாதங்களில் கோமாவில் நிற்கின்றார்கள்.

4.சலே போர் வீரரா?யார் சொன்னது? போர்க்களத்தில் இருக்காதவனை எப்படி நாட்டை காத்த வீரன் என்று கூறுவது? ஆதாரத்துடன் போட்டுடைத்தார் பீல்ட்மார்சல்.

5.2029ல் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் ஜனாதிபதி நாமல் பிரதமர் வேட்பாளர் என்ற ஒரு கதையாலே சஜித் இருதலைக் கெல்லி எறும்பானாராம்.!

6.நாட்டில் பெரும்பாலானோர் நியாயத்தின் பக்கம் நிற்கும் போது சிலர் தன்னலத்துக்காக அநியாயத்தின் பக்கம் நிற்பது இயல்பானதே.

7.சலே மீட்புப் சத்தியக்கிரகத்துக்கு மக்கள் ஆதரவு கம்மியானதால் ஏற்பாட்டாளர்கள் ஓட்டம்.மனைவி தாய் அஸ்கிரிய-மல்வத்த காலடியில்.

Previous Story

பாகிஸ்தான் அமைதி பிரகடனம் ஞாயிறு ஜெனிவாவில் கைச்சாத்தாகிறது

Next Story

fifa -2026