நஜீப்
நன்றி: 24.05.2026 ஞாயிறு தினக்குரல்
கிளிப்பிள்ளைகளுக்கு நாம் எதனைச் சொல்லிக் கொடுக்கின்றோமோ அதனைத்தான் அவை பேசும் உச்சரிக்கும் அதற்குத் தானாக சிந்தித்துப் பேச முடியாது. அது போலதான் நாம் ஜேவிபி பற்றி இதுவரை அறிந்திருக்கின்றோம்-பார்த்து வருகின்றோம்.
ஆனால் அண்மைக் காலமாக குறிப்பாக சில தினங்களாக அந்தக் கட்சி முக்கியஸ்தர்களின் கருத்துக்களில் முரண்பாடுகள் தெரிவதை நாம் கண்டு தெரியாதவர்கள் போல மௌனிப்பது நாகரிகமாக இருக்காது.
ஹஜ் பயணத்துக்கு ஆட்களை அனுப்பியது தொடர்பில் கேள்விகள் எழுப்பப்ட்ட போது பிரதி அமைச்சர் முனீர் இது பற்றி எனக்கு ஏதும் தெரியாது. துறைக்குப் பொறுப்பான அமைச்சரிடத்தில்தான் இதுபற்றி கேட்க வேண்டும் என்று சொல்லி இருந்தார்.
அதே போன்று செல்வாக்கு மிக்க ஜேவிபி. செயலாளர் டில்வின் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கு மாற்றமான கருத்துகளை ஊடப்பேச்சாளரான அமைச்சர் நளிந்த தெரிவித்திருந்தார்.
என்பிபி. க்குள் இந்த முரண்பாட்டை ஜீரணிக்க முடியாதிருக்கின்றது.




