இஸ்ரேல் கைக்கு வந்த 1800 Mark 84 குண்டு.

டிரம்ப் பதிவின் மெகா பின்னணி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான அணு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து முழுமையாக பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் மார்க் 84 குண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் அமெரிக்க போர் விமானத்தில் இணைக்கப்பட்ட ‘மார்க் 84’ என்ற குண்டில் டிரம்பின் பிரபல வசகமான “Thank you for your attention to this matter” என்ற வாசகம் எழுதப்பட்டு உள்ளது.

இந்தப் பதிவு உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்க் 84 (MK-84) குண்டு பயமுறுத்த என்ன காரணம்?

900 கிலோ குண்டு: இது அமெரிக்காவின் 2,000 பவுண்ட் (சுமார் 900 கிலோ) எடையுள்ள பொதுப் பயன்பாட்டு குண்டு. ‘பங்கர் பஸ்டர்’ என்று அழைக்கப்படும் இந்தக் குண்டு, தடிமனான கான்கிரீட் மற்றும் உலோக சுவர்களை உடைத்து உள்ளே நுழையும் திறன் கொண்டது. இதில் சுமார் 945 பவுண்ட் உயர் வெடி பொருள் கொண்டிருக்கும். இந்தக் குண்டு விழுந்தால் 15 மீட்டர் ஆழமுள்ள பெரிய குழி உருவாகும் அளவுக்கும், 120 மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்தையும் அழிக்கும் திறன் கொண்டது.

இதை அமெரிக்க ராணுவத்தில் ‘டம்ப் பாம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்தப் புகைப்படம் வெளியான பின்னணியைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அமெரிக்கா – ஈரான் இடையிலான அணு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையையும், இரு நாடுகள் மத்தியிலான போர் ஆகிவற்றுடன் தொடர்பு கொண்டு உள்ளது.

ஈரானுக்கு பெரும் பாதிப்பு இந்த வெடிகுண்டு மூலம் ஈரானின் அணுஉலைகள், பாலங்கள், விமான நிலையங்கள், ஏவுகணை கட்டமைப்பு என மக்களுக்கான உள்கட்டமைப்பு மூலம் ராணுவ கட்டமைப்பு வரையில் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்பதால் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட குண்டுகள் மார்க் 84 குண்டுகள் கடந்த சில ஆண்டுகளாகவே சர்ச்சைக்குரிய ஆயுதமாக இருந்து வருகின்றன.

பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பயன்படுத்தப்படும் போது இந்த குண்டு பெரும் சேதம் ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறி, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் இந்த குண்டுகளை வெளிநாட்டுக்கு விற்பனை தற்காலிகமாக நிறுத்தியிருந்தது. ஆனால் 2025-ல் டிரம்ப் மீண்டும் அதிகாரத்தில் வந்த பிறகு, அந்தத் தடையை நீக்கி 1,800 மார்க் 84 குண்டுகளை இஸ்ரேலுக்கு அனுப்ப அனுமதி வழங்கியது. இதேபோல் இந்த குண்டும் வியட்நாம் போரில் இருந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது.

குறைவான செலவில் பெரும் பாதிப்பை குறிப்பாக கட்டமானங்களை பெரிய அளவில் தாக்கும் திறன் கொண்டதால் டிரம்ப்-ன் பதிவு ஈரான் மக்களுக்கும், ஈரான் உள்கட்டமைப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. டிரம்ப் இந்தப் புகைப்படத்தை ஏன் பகிர்ந்தார்? இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் உள்ள அதன் கூட்டணி நாடுகளின் தீவிர நெருக்கடியால் டிரம்ப் ஈரானின் கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டார்.

டிரம்ப்-ன் இந்தப் ஒப்பந்த பின்வாங்கல் அறிவிப்புக்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்தப் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. டிரம்பின் இந்த பதிவு ஈரானுக்கான ஒரு மிரட்டல் செய்தியை அனுப்புவே இதை பதிவிட்டு உள்ளார். அமெரிக்கா தனது ராணுவ வலிமையை ஈரானுக்கு நினைவூட்டும் வகையிலும் இந்தப் பதிவு இருப்பதாக கூறப்படுகிறது.

 

Previous Story

கோவை சிறுமிக்கு நேர்ந்த கொடுமை | குடிகார தாயால் ஏற்பட்ட ? | சமூக அவலத்தின் உச்சம்

Next Story

3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா