மீண்டும் வெடிக்கும் போர்? USA VS IRAN

ஈரானுக்குள் இறங்கும் அமெரிக்க வீரர்கள்..

அமெரிக்கா – ஈரான் இடையேயான சமாதான பேச்சுவார்த்தையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஈரானுக்கு எதிராக மீண்டும் ராணுவ தாக்குதல்களை தொடங்குவதற்கான திட்டங்களை அமெரிக்க அதிகாரிகள் வகுத்துள்ளதாக ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த முறை ஈரானுக்குள் இறங்க அமெரிக்க படைகள் தயாராகி வருவதாக திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் மீண்டும் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28 ம் தேதி போரை தொடங்கியது.

இந்த போர் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும் டிரம்பின் நட்பு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், சவுதி அரேபியா உள்பட பல நாடுகள் மீது தாக்குதல் நடத்தியது.

கடைசியாக கடந்த ஏப்ரல் 7 ம் தேதி அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம் என ஈரான் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று டிரம்ப் விரும்பினார்.

இதுதொடர்பாக முதற்கட்டமாக பாகிஸ்தானில் வைத்து அமெரிக்கா – ஈரான் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. 2வது கட்ட பேச்சுவார்த்தைக்கும் ஈரான் சம்மதிக்கவில்லை.

மீண்டும் ஈரானை தாக்கும் அமெரிக்கா? இதனால் இருநாடுகள் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவைத்துள்ளது. இது மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து இந்தியா உள்பட பிற நாடுகளுக்கு செல்லும் கச்சா எண்ணெய், கேஸ் சப்ளையை பாதித்துள்ளது. அமெரிக்காவும் ஈரான் அருகே தனது போர் விமானங்கள், போர்க்கப்பல்களை குவித்து வைத்துள்ளது.

இதனால் போர் நின்றாலும் கூட இருநாடுகள் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் தான் ஈரானுக்கு எதிராக மீண்டும் ராணுவ தாக்குதல்களை தொடங்குவதற்கான திட்டங்களை அமெரிக்க அதிகாரிகள் வகுத்துள்ளதாக ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த வாரமே வெடிக்கும் போர் அந்த செய்தியில், ”வரும் நாட்களில் ‘ஆபரேஷன் எபிக் பியூரி 2.0’ ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. இதனைசமீபத்தில் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சத் உறுதி செய்தார்.

தேவை என்றால் ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்” என கூறப்பட்டுள்ளது. அதேபோல் ”அடுத்த வாரமே ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் மீண்டும் தொடங்கக்கூடும் என்பதால் அதற்கான பணிகளில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தீவிரம் காட்டி வருகிறது.

இதனை பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்” என கூறப்பட்டுள்ளது. ஈரானுக்குள் இறங்கும் வீரர்கள் தற்போதைய நிலையில் மீண்டும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தினால் அது மோசமானதாக அமையலாம். ஈரான் ராணுவ உள்கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்கா தாக்கலாம்.

அதன்பிறகு ஈரானுக்குள் அமெரிக்கா வீரர்கள் இறக்கி போரை தீவிரமாக்கலாம். இவர்கள் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கைப்பற்றும் பணியில் ஈடுபடலாம் அல்லது ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவைக் கைப்பற்றலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்க வீரர்கள் ஈரானுக்குள் இறங்கினால் அந்த நாடு வேடிக்கை பார்க்காது. நிச்சயம் அமெரிக்கா வீரர்களை தாக்கும். இதனால் தரைவழி மோதல் அதிகரித்து உயிர் சேதம் உயர்ந்து போர் சூழல் மோசமாகலாம். இதனால் தற்போது அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் பதற்றம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

சீனாவுடன் விவாதித்த டிரம்ப் முன்னதாக சீனா புறப்படுவதற்கு முன்பாக டிரம்ப் கூறுகையில், ”ஈரான் எங்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்வார்கள். இல்லாவிட்டால் அவர்கள் சிதைக்கப்படவார்கள். இதில் எது நடந்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம்” என்று கூறினார்.

மேலும் சீனாவும், ஈரானும் நல்ல நட்பில் உள்ளனர். இந்த பதற்றத்துக்கு நடுவே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 நாள் சுற்றுப்பயணமாக சீனாவிற்கு சென்றார். 2வது முறையாக டிரம்ப் அதிபரான பிறகு அவர் முதல் முறையாக சீனாவிற்கு சென்றார்.

சீனா- அமெரிக்கா இடையே நிலவும் மோதலுக்கு நடுவே டிரம்ப், அந்தநாட்டின் அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருவரும் ஈரான் போர், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் அடைத்து வைத்திருப்பது பற்றி விவாதித்தனர்.

Previous Story

ஜி ஜின்பிங் பரிசுகளை குப்பையில் வீசிய டிரம்ப் டீம்

Next Story

டிரம்பை விரட்டியடித்த xi jinping? ஈரானை விட்டுக் கொடுக்காத சீனா