நான் தான் ‘வேட்பாளர்’

-நஜீப்-

ராஜபக்ஸாக்கள் தரப்பில் யார் போட்டிக்கு வந்தாலும் நான் தான் எதிரணி வேட்பாளர். நான் அவர்களை தூக்கி வீசி விடுவேன் என்று சில தினங்களுக்கு முன்னர் சஜித் பகிரங்கமாக பேசி இருந்தார்.

இது அந்தக் கட்சியில் 43வது படையணி சார்பில் சம்பிக்க ரணவக்க நடாத்திய மாநாடு விடயத்தில் தனது பதிலைக் காட்டவே அவர் இப்படி பேசி வருகின்றார் என்பது புரிந்து கொள்ளக் கூடியதே, என்றாலும் இந்த இடத்திலும் சஜித் தனது அரசியல் முதிர்ச்சி இல்லாத நிலையைத்தான் நாட்டுக்குக் காட்சிப் படுத்தி இருக்கின்றார் என்று நாம் கருதுகின்றோம்.

வேட்பாளர் யார் என்பதனை விட மக்கள் உள்ளங்களை வெல்வது, நெருக்கடிகளுக்கான தீர்வுகள், அதற்கான ஆளுமை என்பவற்றை வளர்த்துக் கொள்வதும்தான் அவர் இப்போது செய்ய வேண்டிய காரியங்கள் என்பது எமது பார்வை.

தற்போதே சஜித் அணியில் வேட்பாளர் போட்டி துவங்கி இருப்பதைத்தான் அந்த அணியில் நடக்கின்ற செயல்பாடுகளில் தெரிகின்றது. திஸ்ஸ அத்தநாயக்க போன்றவர்களை உள்வாங்கியதில் இருந்து அவர் அரசியல் நம்பகத்தை புரிந்து கொள்ள முடிந்தது.

-நன்றி: ஞாயிறு தினக்குரல் 30.01.2022

Previous Story

உக்ரைன் மீது போர்: ரஷ்யாவுக்கு சவால்ள் 

Next Story

நீர்வீழ்ச்சியில் மூழ்கி தமிழ் யுவதிகள் - விபரம்