நஜீப்
நன்றி: 10.05.2026 ஞாயிறு தினக்குரல்
வருகின்ற செவ்வாய்க் கிழமை 12ம் திகதி சிஐடிக்கு ஒரு விளக்கத்தைப் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸாவை வருமாறு அழைத்திருக்கின்றார்கள்.
அந்த நேரம் அவர் கைதாகலாம் என்ற அச்சமும் காணப்படுகின்றது. எனவே கொழும்புக்கு அன்றைய தினம் வருமாறு திஸ்ஸகுட்டி ஆதரவாலர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.
அதற்கான ஆட்களைத் திரட்டி வருவதற்காகத்தான் இவர்கள் மே தின கூட்டங்களை தவிர்த்தார்கள் என்றும் சொல்லப்படுகின்றது. மேலும் மேரி லூட்ஸ் விக்கிரமசிங்ஹ என்ற பெயரில் சிரந்தி ராஜபக்ஸவுக்கு கொழும்பு 5 டொரிங்டன் வீதி 205ம்இலக்கத்தில் ஒரு வீடு இருக்கின்றது.
சிரந்தி ராஜபக்ஸ தனது இயற்பெயரைப் பாவித்துத்தான் இந்த வீட்டை வங்கியதாக ஒரு கதையும் லஞ்சமாகப் பெற்றதாகவும் ஒரு கதை இருக்கின்றது. இந்த வீடு வாங்குவதற்கு எங்கிருந்து பணம் கிடைத்தது என்ற கேள்விகள் வருமானத்துறையால் கேட்கபட்டு வருகின்றது.




