ஞானமும் சஹ்ரானும் கூட்டணி!

நஜீப்

நன்றி: 03.05.2026 ஞாயிறு தினக்குரல்

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியாக இதுவரை கருதப்படுகின்ற சஹ்ரன் ஹசீம் மற்றும் ஞானசாரத் தேரர் இந்த இருவரையும் நெறிப்படுத்தி அவர்களுக்கான ஏற்பாடுகளை இராணுவப் புலனாய்வுத் துறையினர்தான் செய்து கொடுத்திருந்தது.

இது பற்றி கோட்டை நீதி மன்றத்தில் கடந்த புதன்கிழமை சொல்லப்பட்ட போது இதற்கு என்ன ஆதாரங்களை வைத்திருக்கின்றீர்கள் என்று நீதிபதி அங்கு கேள்வி எழுப்ப, அதற்கு பதில் கொடுத்த மேலதிக செலிஸ்டர் ஜெனரல் திலிப பீரீஸ் ஆம் இதற்கு தன்னிடம் தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன என்று அங்கு அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

கடந்த புதன்கிழமை தான் கைது செய்யப்பட்ட துவான் சுரேஸ் சாலே முதல் முறையாக நீதி மன்றத்துக்கும் அழைத்துவரப்பட்டிருந்தார்.

மேலும் செனல் 4 மூலம் பல தகவல்களை தந்த அசாட் மௌலானாவை சந்திக்க சானி அபேசேக்கர பிரான்ஸ் போக இருப்பதாகவும் ஒரு தகவல் நமக்கு வந்திருக்கின்றது.

 

Previous Story

මැයි රැළි අතරේ - කතා මැද කතා

Next Story

நாட்டை உலுக்கிய பாத யாத்திரையும் போதை யாத்திரையும்