ரேடாரில் சிக்காது.. ஒலியை விட 5 மடங்கு வேகம்..

டார்க் ஈகிளை” களமிறக்கும் அமெரிக்கா! மிரளும் ஈரான்

“World’s most fearsome missile” – The US Army unleashes Dark Eagle, a 1,725-mile hypersonic marvel

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா தனது வரலாற்றிலேயே முதன் முறையாக டார்க் ஈகிள் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஈரானுக்கு எதிராகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் இன்னும் விலகாத நிலையில், அமெரிக்கா தனது ராணுவ பலத்தைக் காட்ட ஒரு பிரம்மாண்ட ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது.

ஒலியின் வேகத்தை விடப் பல மடங்கு வேகமாகச் சென்று, எதிரி நாடுகளின் ரேடார்களில் கூட சிக்காமல் தாக்கக்கூடிய டார்க் ஈகிள் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை முதன்முறையாகப் போர்க்களத்தில் இறக்க அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

தொடரும் பதற்றம்: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில வாரங்களாக நிலவி வரும் நேரடி மோதல் போக்கு, தற்போது ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளது. நேரடி தாக்குதல் இல்லை என்றாலும் இதுவரை முழுமையாக அமைதி ஒப்பந்தம் எட்டப்படவில்லை. அமெரிக்காவின் கண்டிஷன்களை ஈரான் ஏற்க மறுக்கும் நிலையில், ஈரான் சொல்வதை அமெரிக்கா கேட்க மறுக்கிறது.

இதனால் அந்த பிராந்தியத்தில் பதற்றம் தொடரவே செய்கிறது. இதற்கிடையே ஈரானின் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் ராணுவக் கட்டமைப்புகளைக் குறிவைத்துத் தாக்க, அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த டார்க் ஈகிள் ஏவுகணைகளை அமெரிக்க ராணுவம் நிலைநிறுத்தத் தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவின் மத்திய கமாண்ட் (CENTCOM) பிரிவில் இருந்து கோரிக்கை வந்துள்ளதாகக் கோரப்படுகிறது. இருப்பினும், பென்டகன் இதுவரை இந்த விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்கவில்லை.

அதென்ன டார்க் ஈகிள் மின்னல் வேகம்: இந்த ஏவுகணைகள் ஒலியை விட ஐந்து மடங்குக்கும் மேலான வேகத்தில் (Mach 5+) செல்லக்கூடியவை. ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான மைல்கள் தூரத்தில் உள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டவை.

ரேடாருக்கு சவால்: தற்போதைய ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளால் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைக் கண்டறிவதோ அல்லது இடையில் தடுத்து அழிப்பதோ கிட்டத்தட்டச் சாத்தியமற்றது. இது ஈரானின் வான் பாதுகாப்பு அரண்களை எளிதில் ஊடுருவிச் செல்லும் என அமெரிக்கா நம்புகிறது.

அமெரிக்காவின் முதல் முயற்சி: இதற்கு முன்பு ரஷ்யாவும் சீனாவும் ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருந்தாலும், அமெரிக்கா ஒரு நேரடிப் போரில் இதனைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறையாக இருக்கும். அச்சம் ஈரான் மீது இத்தகைய அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்தினால், அது ஈரானின் அண்டை நாடுகளையும் பாதிக்கும் என ரஷ்ய அதிபர் புதின் ஏற்கனவே எச்சரித்துள்ளார்.

மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் அதிகரித்து கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $120ஐ தொட்டுள்ள நிலையில், மீண்டும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டால் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத உச்சம் தொடும். மேலும், அது உலகப் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

 “பேரழிவு நிச்சயம்..” நேரடியாகவே எச்சரித்த புதின்.. ஒரு நொடி ஸ்டன் ஆன டிரம்ப்! என்ன நடந்தது உலகப் போர்? ஈரான் பேச்சுவார்த்தை முடிய போகிறது என டிரம்ப் ஒரு பக்கம் சொன்னாலும் கூட அது முடிவதாகத் தெரியவில்லை. இந்தச் சூழலில் டார்க் ஈகிள் குறித்த தகவல் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இத்தகைய அழிவு தரும் ஆயுதங்களை ஏவுவது என்பது மூன்றாவது உலகப் போர் ஏற்படுமோ என்ற அச்சத்தையே மக்களிடையே ஏற்படுத்துகிறது.!

Previous Story

මිය ගිය භාණ්ඩාගාර අධ්‍යක්ෂක වින්දිතයෙක්! බිල්ල පිටුපස අභිරහස් රැසක්!

Next Story

පල්ලේගමගේ බලු වැඩ නිසා අනුර වැටෙන්න යන අගාදයෙන් බේරීමට හැකි එකම මග මෙන්න