ஒரே நொடியில் எதிரிகளுக்கு மாரடைப்பு…!

நீருக்கு அடியில் பாயும் மின்னல்..

ஈரானின் சீக்ரெட் திமிங்கிலம்!

அமெரிக்கா ஈரான் இடையே நேரடி தாக்குதல்கள் இல்லை என்றாலும் இன்னும் முழுமையாக அங்கு அமைதி திரும்பவில்லை. இதற்கிடையே எதிரிகளுக்கு மாரடைப்பை ஏற்படுத்தும் ஒரு ரகசிய ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளதாக ஈரான் எச்சரித்துள்ளது.

இது தொடர்பான தகவல்களை அமெரிக்காவும் உற்றுக் கவனித்து வருகிறது. அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையில் முடிந்துள்ள நிலையில், ஈரான் தனது கடற்படைத் தளபதி ஷாராம் இரானி மூலமாக விடுத்துள்ள ஒரு மர்ம எச்சரிக்கை சர்வதேச பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிரிகளை மாரடைப்பை ஏற்படுத்தும் ஒரு ரகசிய ஆயுதத்தை ஈரான் கையில் எடுத்துள்ளதாக ஷாராம் கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

மிரட்டல்: இதற்கிடையே எதிரிகளுக்கு மரண பயத்தை ஏற்படுத்தும் ஒரு ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளதாக ஈரான் கடற்படைத் தளபதி ஷாராம் இரானி எச்சரித்துள்ளார். இது தொடர்பாக ஷாராம் மேலும் கூறுகையில், “எதிரிகளுக்கு மிக அருகிலேயே அந்தப் புதிய ஆயுதம் இருக்கிறது;

பார்த்தால் அவர்களுக்கு மாரடைப்பே வந்துவிடும்” என அவர் சஸ்பென்ஸ் வைத்துள்ளார். இந்த மர்ம ஆயுதம், ஈரானின் ரகசியத் தயாரிப்பான ‘ஹூட்’ ஏவுகணையாக இருக்கலாம் எனப் பாதுகாப்பு நிபுணர் சந்தீப் உன்னிதன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரான் கடற்படைத் தளபதி ஷாராம் இரானியின் சமீபத்திய பேச்சு, அமெரிக்காவைக் கூர்ந்து கவனிக்க வைத்துள்ளது.. அதென்ன ‘ஹூட்’ பெர்சிய மொழியில் ‘ஹூட்’ என்றால் திமிங்கிலம் என்று பொருள். இது சாதாரண டோர்பிடோ கிடையாது.. நீருக்கு அடியில் ஒலியை விட வேகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சூப்பர்-கேவிடேட்டிங் ரகத்தைச் சேர்ந்தது.

டோர்பிடோக்கள்:மணிக்கு 60 முதல் 100 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்லும். ஆனால், ஹூட் மணிக்கு 360 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது. பலம்- பலவீனம் பொதுவாக நீர் என்பது காற்றை விட 1,000 மடங்கு அடர்த்தியானது, இது வேகத்தைத் தடுக்கும். ஆனால், ஹூட் தன்னைச் சுற்றி ஒரு கேஸ் குமிழியை அதாவது Gas Bubbleஐ உருவாக்கி, நீரின் எதிர்ப்பைக் குறைத்து ஒரு புல்லட்டைப் போலப் பாய்ந்து செல்லும். இதனை சூப்பர்-கேவிடேஷன் தொழில்நுட்பம் என்கிறார்கள்.

கிலோவுக்கும் அதிகமான வெடிபொருட்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. இதன் மின்னல் வேகத்தால், எதிரி கப்பல்களுக்குத் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க நேரம் இருக்காது. அதிவேகமாகச் செல்வதால் எரிபொருள் விரைவில் தீர்ந்துவிடும். இதனால் அதிகபட்மச் 15 கி.மீ மட்டுமே சென்று தாக்க முடியும் என்பது ஒரு பலவீனம். சாதாரண டோர்பிடோக்கள் 30 கி.மீ தூரம் வரை தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இதன் வேகம் மற்றும் சத்தம் காரணமாக சோனார் கருவிகளைக் கொண்டு தாக்குவதும் கொஞம் கடினம்! அமெரிக்கா ஒரு அடி எடுத்து வைத்தால்.. ‘எரித்துவிடுவோம்’.. ஈரானின் மிரட்டலால் ஆடிப்போன டிரம்ப்!

அமெரிக்காவுக்கு சிக்கல்? அமெரிக்காவின் ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ போன்ற பிரம்மாண்ட கப்பல்கள் பல்வேறு தற்காப்பு வளையங்களைக் கொண்டவை. மேலும், ஹூட் ஏவுகணையை ஏவ ஈரான் கப்பல்கள் 15 கி.மீ தூரத்திற்கு மிக அருகிலேயே செல்ல வேண்டும். இது ஒரு தற்கொலை முயற்சிக்குச் சமம். திறந்த வெளியில் இது சாத்தியமில்லை என்றாலும், குறுகிய இடமான ஹார்முஸ் ஜலசந்தியில் பதுங்கியிருந்து தாக்கினால் இது அமெரிக்கக் கப்பல்களுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

நிபுணர்களின் கருத்துப்படி அதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு! ஈரானின் இந்த அறிவிப்பு வெறும் ‘உளவியல் போர்’ என்றே பலரும் சொல்கிறார்கள். இருப்பினும், நவீனப் போர்க்களத்தில் தொழில்நுட்பம் தரும் ஆச்சரியங்கள் பல. எனவே, ‘ஹூட்’ ஏவுகணையைச் சாதாரணமாகக் கடந்து செல்லவும் முடியாது!

 

Previous Story

ඩොලර් මිලියන 2.5ක් වංචනික

Next Story

මිය ගිය භාණ්ඩාගාර අධ්‍යක්ෂක වින්දිතයෙක්! බිල්ල පිටුපස අභිරහස් රැසක්!