உல்லாச வசதிக்கு ஆசையை தூண்டிய தொழிலதிபர்!

110 கோடி டீல்!

22 புத்த துறவிகள்!

பகீர் பின்னணி!

Thailand Businessman Luxury bait Drug scandal Sri Lanka news 22 monks 110 crore case Airport arrest Drug trafficking 22 110

இலங்கை ஏர்போர்ட்டில் நடந்த சோதனை ஒன்று, ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியுள்ளது. வழக்கமாக பக்தியுடனும் மரியாதையுடனும் பார்க்கப்படும் புத்த துறவிகள் சிலர், சுமார் 110 கோடி ரூபாய் மதிப்பிலான பயங்கரமான போதைப்பொருட்களைக் கடத்தி வந்தபோது கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறார்கள்.

மொத்தம் 22 புத்த துறவிகள் கைதும் செய்யப்பட்டுள்ளனர். இவ்வளவு பெரிய அளவில் துறவிகள் வேடத்தில் போதைப்பொருள் கடத்தப்பட்டது அந்நாட்டு வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை என்று போலீசார் அதிர்ச்சியுடன் சொல்கிறார்கள்.

என்ன நடந்தது? தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கிற்குச் சுற்றுலா சென்றிருந்த இந்த புத்த துறவிகள், அங்கிருந்து கொழும்பு திரும்பியபோதுதான் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக அந்நாட்டு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், தலைநகர் கொழும்பில் உள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

சுற்றுலா வந்த இலங்கை புத்த பிட்சுகள் அப்போது ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில், அவர்கள் கொண்டு வந்த பெரிய பெரிய பார்சல்களை காவல்துறையினர் பிரித்து சோதனை செய்தனர்.

அந்தப் பார்சல்களுக்குள் மேலோட்டமாகப் பார்த்தபோது ஏழை மாணவர்களுக்கான புத்தகங்கள், பேனாக்கள், ஸ்வீட் பொட்டலங்கள் மட்டுமே இருந்தன. ஆனாலும் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தபடியே இருந்தது.

அதனால் அந்த பார்சல்களை தட்டி பார்த்தபோது, அவற்றின் அடிப்பகுதியில் ரகசிய அறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டடன. அந்த அறைகளை திறந்து பார்த்தபோது, உள்ளே “குஷ்” மற்றும் “ஐஸ்” எனப்படும் மிக வீரியமான போதைப்பொருள் பாக்கெட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ஒவ்வொரு துறவியிடமிருந்தும் தலா 5 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 112 கிலோ எடையுள்ள இந்தப் போதைப்பொருட்களின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 110 கோடி ரூபாய்க்கும் அதிகம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

புத்த துறவிகள் அதிர்ச்சி சம்பவம்: உடனே இதுகுறித்த விசாரணையையும் மேற்கொண்டனர்.. அப்போது ஒரு பெரிய தொழிலதிபரின் நிதியுதவியுடன் இந்தத் துறவிகள் தாய்லாந்திற்குச் சுற்றுலா சென்று வந்ததும், அங்கு அவர்கள் துறவிகளுக்குரிய ஆடை இல்லாமல் சாதாரண உடையில் சுற்றித் திரிந்ததும் தெரியவந்தது.

இதில் வேதனையான விஷயம் என்ன தெரியுமா? கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இளம் துறவிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் ஆவர். இவர்களை மூளைச்சலவை செய்து இந்த பாதக செயலில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள்..

இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்ட நபர் ஒருவரையும் காவல்துறையினர் கம்பஹா பகுதியில் கைது செய்துள்ளனர்.

உல்லாச சொகுசு வசதிகள்: அந்த நபர் பேஸ்புக் மூலமாக இந்தத் துறவிகளைத் தொடர்பு கொண்டு, “உங்களுக்கு இலவசமாக தாய்லாந்து அழைத்து சென்று வருகிறேன், அங்கு தங்குவதற்குச் சொகுசு வசதிகள் செய்து தருகிறேன்” என்று ஆசை காட்டியுள்ளார்.

கைதான துறவிகள் சிலர், “நாங்கள் மாணவர்களுக்கான உதவி பொருட்களைத்தான் எடுத்துச் செல்கிறோம் என்று நினைத்தோம், எங்களுக்குப் போதைப்பொருள் பற்றித் தெரியாது, சொசுகு வசதிகளுக்கு ஆசைப்பட்டு இப்படி சிக்கினோம்” என்று வாக்குமூலம் அளித்துள்ளனர்.

எனினும், திட்டமிட்டே இவர்கள் இந்தக் கடத்தலில் ஈடுபட்டார்களா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இதனிடையே, இந்த சம்பவம் குறித்து இலங்கை புத்த மதத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

“இவர்கள் புத்த மதத்தின் புனிதத்தைக் கெடுக்க வந்த வேடதாரிகள், இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

22 துறவிகளுக்கும் ஜெயில்: தற்போது கைது செய்யப்பட்ட 22 புத்த துறவிகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், மே மாதம் 2-ம் தேதி வரை அவர்களை ஜெயிலில் அடைக்க உத்தரவு பெற்றுள்ளனர்.

ஆன்மீக பாதையில் இருக்க வேண்டியவர்கள், இப்படித் தவறான வழியில் சென்று போதைப்பொருள் கடத்தியது இலங்கை மக்களிடையே பெரும் கோபத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சதித்திட்டத்தின் பின்னால் இருக்கும் சர்வதேசக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களையும் பிடிப்பதற்குப் புலனாய்வுத் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்…!!!

 

Previous Story

හරි වැරැද්ද ගිහියන්ට වැඩක් නෑ - සිවුරට ගරු කරන්න....?

Next Story

දිලීප , ලසන්ත ගැටුමට මුල දීප්තගේ ගේමක්...!