துரோகமும். துரோகியும்…!

25 வருடங்களாக ஒரு வேலையும் செய்யாமல் எங்கள் சமூகத்தின் மாப்பிள்ளைமா…மாதிரி??

இருந்து வரும் தலைவனின் பிறந்தநாளை நாமும் பாராட்டாது விடுவது அவ்வளவு நல்லதல்ல….??

இவ்வளவு அநியாயங்களை ஆடாமல் அசையாமல் செய்துவிட்டு, ஒன்றும் அறியாதவர் போல் சிரித்த முகத்துடன் இருக்கும் இந்த மனிதனை பாராட்டியே ஆகவேண்டும்….

ஹக்கீம் ஆட்சி அதிகாரத்துடன் இருந்த போது நமது சமூகத்துக்கு எவ்வித சேவைகளையும் செய்யவில்லை என்பது ஒருபக்கமிருந்தாலும், இவர் சமூகத்துக்கு செய்த துரோகங்கள் ஏராளம்….

துரோகம்..(1)

2002ஆம் ஆண்டுகாலப் பகுதியில் சமாதான பேச்சு வார்த்தையொன்று ஜெனிவாவில் நடத்த ஏற்பாடாகியிருந்தது. அந்த பேச்சுவார்த்தையில் முஸ்லிம் சமூகத்தின் சார்பான பிரதிநிதியாக ஹக்கீம் கலந்து கொள்ள வாய்ப்பிருந்தும் அதனை செய்யாமல் ரணிலின் பிரதிநிதியாக சென்று முஸ்லிம் சமூகத்தின் தனித் தன்மையை பாதுகாக்க தவறியிருந்தார்.

துரோகம்..(2)

அந்த ஜெனிவா பேச்சுவார்த்தையில் ரணிலின் சார்பாக பங்கு கொண்ட ஹக்கீம் முஸ்லிம் சமூகம் சார்ந்த எந்த பிரச்சினைகளைய, அதற்கான ஆவணங்களையோ, அதற்கான தீர்வையோ அந்த சபையில் முன்வைக்கவில்லை மாறாக நான் இதற்கு ஆயத்தமாகவரவில்லை.

இன்னொரு சந்தர்ப்பம் தாருங்கள் அந்த நேரம் இதற்கான விடயங்களை சமூகம் சார்ந்து முன்வைக்கிறேன் என்று சபையில் தவணை கேட்டார். அதற்கு அன்டன் பாலசிங்கத்திடம் நன்றாக வாங்கி கட்டிக் கொண்டு நாட்டுக்கு தப்பியோடி வந்தார்.

துரோகம்.. (3)

ஹக்கீமும் பிரபாகரனும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தார்கள். அந்த ஒப்பந்தத்தில்” புலிகள் வடக்கில் பரம்பரையாக வசித்து வந்த முஸ்லிம் மக்களை உடுத்த உடையுடன் வழுக்கட்டாயமாக வெளியேற்றிய நிகழ்வை மூடிமறைத்து “தானாக வெளியேறிய மக்கள்” என்ற அர்த்தப்பட எழுதப்பட்டிருந்த ஒப்பந்த பத்திரத்தில் கையொப்பமிட்டு நமது சமூகத்தை காட்டிக் கொடுத்தார்.

துரோகம்.. (4)

ரணிலும் பிரபாகரனும் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் முஸ்லிம்  சமூகம் என்று எழுத வேண்டிய இடத்தில் “ஒரு குழு” என எழுதப்பட்டிருந்தது. அந்த விடயத்தை ஹக்கீம் கண்டிக்கவுமில்லை, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவுமில்லை.

அதன் காரணமாக புலிகளினால் முஸ்லிம்கள் துன்புறுத்தலுக்கு ஆளானபோது, இதனை கண்காணிக்க வந்த வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கு இலங்கயைில் முஸ்லிம் சமூகம் என்ற ஒன்று இருப்பதாக எங்களுக்கு தெரியாது என்று கூறினர்.

புலிகளினால் முஸ்லிம்கள் பாதிக்கப்படுகின்ற போது அவர்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது என்ற விடயம் ஒப்பந்தத்தில்              குறிப்பிடபடாததனால் முஸ்லிம்களுக்கு நடக்கும் அநியாயங்களை எங்களால்       தட்டிக் கேட்க முடியாது என்றுகை விரித்தனர்.

இதற்கெல்லாம் காரணம் ந்த ஒப்பந்தத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு யார் பாதுகாப்பு கொடுப்பதென்ற வசனம் இல்லாததுதான் காரணமாகும். இதனை ரணிலின் பினாமியாக இருந்த ஹக்கீம் கண்டு கொள்ளாமல் இருந்தார்.

துரோகம்..(5)

முஸ்லிம் சமூகத்தின் அபிப்ராயம் கேட்கப்படாமல் இரவோடு இரவாக இயற்றப்பட்ட 13வது திருத்த சட்டத்தினூடாக முஸ்லிம் சமூகத்துக்கு எவ்வித பிரயோசனமும் இல்லையென்று தெரிந்தும், அதனை முழுவதுமாக நிறைவேற்றுங்கள் என்று பகிரங்கமாக கூறிவரும் ஒரே முஸ்லிம் தலைவர் ஹக்கீம்தான்…

துரோகம் ..(6)

வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என்று தமிழ் தரப்பினர் போராடி வருகின்றார்கள். அப்படி வடக்கும் கிழக்கும் இணைந்தால் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் இருப்பு கேள்விகுறியாக மாறும் என்று தெரிந்திருக்கும் முஸ்லிம் தலைவர்கள் அனைபேரும் அதற்கு தங்களது எதிர்ப்பை பகிரங்கமாக தெரிவித்து விட்டனர்.

ஆனால் ஹக்கீம் மட்டும் இதுவரை அதற்கு எதிராக எந்த எதிர்ப்பையும் பதிவு செய்யாமல் நழுவி வருகின்றார்.

துரோகம் (7)

ஸஹ்ரான் என்ற பயங்கரவாதி இலங்கையில் நடத்திய ஈஸ்டர் குண்டு தாக்குதலை தொடர்ந்து. அதனை விசாரணை செய்த பாராளுமன்ற தெரிவுக் குழுவின் ஒரு நீதிபதியாக ஹக்கீம் நியமிக்கப்பட்டிருந்தார். அந்த விசாரணை குழுவின் பரிந்துரைகளில்

A)மதரஸாக்கள் கல்வி அமைச்சின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டுமென்று கூறியுள்ளார்.

B)இனரீதியான பாடசாலைகள் தடை செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

C)இளஞர்கள் முதியோர்கள் நேரடியாக வாசித்து புரிந்து கொள்ளக்கூடிய சமய பாடபுத்தகங்களை கொண்டிருக்க வேண்டும். மற்றவர்கள் வியாக்கியானம் செய்து புரிந்து கொள்ள இடமளிக்ககூடாது என்பது போன்ற அர்த்தத்துடன் பரிந்துரை செய்துள்ளார். (இதனால்தான் தனி அரபு எழுத்தில் அமைந்துள்ள குர்ஆன் பிரதிகளை இலங்கைக்குள் அரசாங்கம் அனுமதிக்கவில்லை.)

D)எல்லா பாடசாலைகளிலும் சிங்கள தமிழ் புத்தாண்டு, ரமழான், நத்தார், மகாசிவராத்திரி போன்ற நிகழ்வுகள் சகல பாடசாலைகளிலும் இடம்பெற வேண்டும் எனபரிந்துரை செய்துள்ளார்.

E)சகல பாடசாலைகளிலும் சகல இன மதகுழுக்களுக்குமான கலப்புபாடசாலைகளாக அமைய வேண்டும் என்ற அர்த்தப்பட பரிந்துரை செய்துள்ளார்.

துரோகம் (8)

ஹக்கீமின் சகோதரர் ரஹுப் ஹசீர் கிழக்கு மக்களை கேவலப்படுத்தும் முகமாக “கிழக்கான் தே…..யாள் பழக்கம் கொண்டவர்கள்” என்று பகிரங்கமாக சமூக வலைத் தளத்தில் குறிப்பிட்டிருந்தார். அதனை இன்று வரைகண்டிக்காத ஒருவராக ஹக்கீம் இருக்கின்றார்.

துரோகம்(9)…

இதே போன்ற கருத்தை ஹக்கிமின் மச்சான் முறையை கொண்ட சபீக்ரஜாப்தீன் என்பவர் தனது முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.” கிழக்கான் பதவி பட்டம் உதவி கேட்பதாக இருந்தால் எங்களது காலடியில் விழுந்துதான் பெற வேண்டும் என்ற அர்த்தப்பட எழுதியிருந்தார்.

அதனை ஹக்கீம் கண்டிக்கவில்லை மாறாக அவருக்கு கட்சியில் உயர் பதவி கொடுத்து கௌரவித்திருந்தார்.

துரோகம் (10)

கடந்த கோட்டாவின் ஆட்சியின்போது, ஜனாசாக்கள் எரிக்கப்பட்ட விடயம் நடந்தது. அந்த நேரம் கோட்டாவுக்கு 20வது திருத்தம் நிறைவேற்றப்பட ஹக்கீமின் ஆதரவு தேவைபட்டிருந்தது.

அந்த நேரம் பெசீலோடும், கோட்டாவோடும் பலகட்ட ரகசிய பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்ட ஹக்கீம், அந்த பேச்சு வார்த்தையின் பின்னர் தன்னுடைய எம்பிமாரை 20பதுக்கு ஆதரவாக கைதூக்குங்கள் என்று ஏவியிருந்தார்.

அவர்களும் அதே மாதிரி கோட்டாவுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். ஆனால் ஜனாசா எரிப்பை தடுப்பதற்கான எந்த ஏற்பாட்டையும் ஹக்கீம் செய்யவில்லை.. (இது சம்பந்தமாக ஆசாத்சாலி, தற்போதைய ஜனாதிபதி அனுரா, ஹரீஸ் எம்பி போன்றோர் பகிரங்கமாகவே இதனை உறுதிப்படுத்தி கருத்து கூறியிருந்தனர் என்பது மட்டுமல்ல கோட்டாவோடும் பெசீலோடும் ரகசியமாக பேசியது உண்மைதான் என்று ஹக்கீமே ஏற்றுக் கொண்டுள்ளார்.. வீடியோ ஆதாரங்களும் உண்டு)

துரோகம் (11)…

ஹக்கீம் தான் எழுதிய புத்தகத்தில் மா பெரிய அபாண்டம் ஒன்றை கிழக்கு மக்களின் மீது சுமத்தியுள்ளார். கிழக்கிலே ஜிஹாத் என்ற இயக்கம் இருந்ததாகவும் அவர்கள் வளைகுடா நாடுகளிடமிருந்து ரகசியமான முறையில் பணத்தை பெற்று கிழக்கிலே ஷரீயா சட்டத்தை அமுல்படுத்த முனைந்தார்கள் அதனை நாங்கள் கண்டு கொள்ளாமல் விட்டது தவறாய் போய் விட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜிஹாத் என்ற ஒரு இயக்கம் கிழக்கிலே இருந்தாக அரசாங்க உளவுதுறை கூடகூறாத நிலையில் இப்படியான பொய்யை எவ்வித கூச்சமுமின்றி கூறியுள்ளார் ஹக்கீம்..

ஆகவே….ஹக்கீம் என்ற தலைவன் நமது சமூகத்துக்கு துரோகம் செய்த விடயங்களே அதிகமாகவுள்ளது. இப்படியானது ரோகங்களைஅ தாவுல்லாவோ, ரிசாட் பதியுதீனோ செய்யவில்லை என்பதனால் நான் அவர்களை துரோகிகள் என்று அழைப்பதில்லை…..காலத்துக்கு காலம் ஹக்கீம் செய்து வந்த துரோகத்துக்காகவே ஹக்கீமை துரோகி என்கின்றேன்… புரிந்தால் சரிதான்….!??

-#முனைமருதவன்♥-

குறிப்பு:முகநூலில் இருந்த இந்த ஆதங்கம் காலங் கடந்துதான் நமது கண்ணில் பட்டது அதனால்தான் தாமதமாகப் பதிகின்றோம்.

Previous Story

"ජනවරමේ සාරය" ආච්චිගේ රෙද්ද ! |ඇමති සහ ලේකම් ගෙදර යන්න කළින් ඇතුළේ කතාව එළියට!

Next Story

10வருடத்தில் முடியாத அபிவிருத்தியை 1 வருடத்தில் செய்த NPP அரசு!