வெடிக்க போகுது உலக போர்?
ஹார்முஸ் ஜலசந்தியை சுற்றிலும் அரசியல் தீவிரமடைந்துள்ளது. ஒரு பக்கம் அமெரிக்கக் கடற்படை முற்றுகையிட மற்றொருபுறம் சீனா நிலைமையை உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறது. இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியில் சீனா தனது கடற்படை கப்பல்களைக் களமிறக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்! வளைகுடாவில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்த மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இருப்பினும், நிரந்தர அமைதி ஒப்பந்தம் எதுவும் ஏற்படவில்லை. பேச்சுவார்த்தையிலும் இழுபறியில் உள்ள நிலையில், அமெரிக்கா ஹார்முஸை முடக்கியுள்ளது.
ஈரானுக்குச் செல்லும் கப்பல்களை நிறுத்துவதாகச் சொல்லி தனது போர்க்கப்பல்களை நிறுத்தி அமெரிக்கா முடக்கியுள்ளது. சீனாவுக்கு எதிரானது இது ஈரானுக்கு எதிரான போர் மட்டுமல்ல, சீனாவுக்கு எதிரானதும் கூட! எனச் சொல்லும் அளவுக்கே இந்த நடவடிக்கை இருக்கிறது.
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே வெடித்துள்ள மோதல், இப்போது மெல்ல மெல்லச் சீனாவை ஒரு நேரடி மோதலுக்குள் இழுத்துக் கொண்டிருக்கிறது. இதன் மையப்புள்ளியாக இருப்பது ஏற்கனவே குறிப்பிட்டது போல உலக நாடுகளின் எரிசக்தி நரம்பாகக் கருதப்படும் ‘ஹார்முஸ் ஜலசந்தி’ தான்.
அமெரிக்காவின் கடற்படை முற்றுகை இப்போது ஈரானை விடச் சீனாவிற்குத் தான் அதிக தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. முற்றுகை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் எண்ணெய் வருமானத்தை முடக்க ஹார்முஸ் ஜலசந்தியில் கடற்படை முற்றுகைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது ஈரானை பொருளாதார ரீதியாக நசுக்கும் முயற்சி என்றாலும் சீனாவைத் தான் இது நேரடியாகப் பாதிக்கிறது. காரணம், சீனா தனது கச்சா எண்ணெய் இறக்குமதியில் 40 சதவீதத்தை இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத் தான் பெறுகிறது. குறிப்பாக, ஈரான் ஏற்றுமதி செய்யும் 90 சதவீத எண்ணெய்யைச் சீனா தான் வாங்குகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அமெரிக்க முற்றுகையைத் தாண்ட முடியாமல் சீனாவிற்குச் சொந்தமான ஒரு எண்ணெய் கப்பல் மீண்டும் ஈரானிய துறைமுகத்திற்கே திரும்பியுள்ளது. இது இந்த மோதலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
உளவுத் துறை ஈரானுக்குச் சீனா ரகசியமாக ஆயுதங்களை விநியோகம் செய்வதாக அமெரிக்க உளவுத்துறை குற்றம் சாட்டுகிறது. குறிப்பாக, நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளைச் சீனா வழங்க உள்ளதாகச் செய்திகள் வெளியான நிலையில், ட்ரம்ப் தனது பாணியில் ஒரு மிரட்டலை விடுத்துள்ளார்.
அவர் இது தொடர்பாக, “ஈரானுக்கு ராணுவத் தளவாடங்களை வழங்கினால், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மீதும் 50% வரி விதிக்கப்படும்” என அவர் எச்சரித்துள்ளார். 3 ஆப்ஷன்கள் இது ஒருபுறம் பொருளாதாரப் போர் என்றால், மறுபுறம் ஹார்முஸ் விவகாரத்தில் சீனக் கடற்படையைச் சீனா களமிறக்க வாய்ப்புள்ளதாகப் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அப்படி ஒருவேளை ஹார்முஸ் விவகாரத்தில் சீனா தனது கடற்படையைக் களமிறக்கினால் அவர்களுக்கு மூன்று ஆப்ஷன்கள் உள்ளன. கடற்படை பாதுகாப்பு: தனது எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா மறிப்பதைத் தவிர்க்க, அவற்றுக்குத் துணையாகத் தனது போர்க்கப்பல்களைச் சீனா அனுப்பலாம். சீனாவிடம் அமெரிக்காவை விட அதிக எண்ணிக்கையிலான போர்க்கப்பல்கள் இருப்பது இங்கே கவனிக்கத்தக்கது.
தைவான் ஜலசந்தியில் அழுத்தம்: ஹார்முஸ் பிரச்சனையைச் சமாளிக்க, அமெரிக்காவிற்கு நெருக்கமான தைவான் ஜலசந்தி போன்ற பகுதிகளில் சீனா தனது ஆதிக்கத்தைக் காட்டலாம்.
ராஜதந்திர முடக்கம்: அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜி ஜின்பிங்-ட்ரம்ப் இடையிலான சந்திப்பைச் சீனா ரத்து செய்யலாம். அமெரிக்கா vs சீனா ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் இப்போது அமெரிக்கா vs சீனா என்ற வல்லரசுப் போட்டியாக மாற ஆரம்பித்துள்ளது..
சீனா இதுவரை அமைதி காத்தாலும், தனது எரிசக்தி தேவையில் கைவைக்கும்போது அது டிராகன் ஆக மாற வாய்ப்புள்ளது. குறிப்பாக, ஜார்ஜ் சாங் போன்ற நிபுணர்கள் சொல்வது போல, “இது அமெரிக்கா vs ஈரான் என்பதில் இருந்து அமெரிக்கா vs சீனா” என்ற ஆபத்தான திசையை நோக்கி நகர்கிறது.





